திங்கள், 15 நவம்பர், 2010

கர்ப்பத்தின்போது விழுங்கும் வலி நிவாரண மாத்திரைகளால் குழந்தைகள் மலடு ஆகும் ஆபத்து

கர்ப்ப காலத்தில் பெண்கள் தலைவலி, கை, கால்வலி ஏற்படும் போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். இந்த மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கினால், அவை கருவில் வளரும் ஆண் குழந்தைகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் உள்ள ரிக் ஆஸ்பத்திரி மூத்த விஞ்ஞானி ஹென்ரிக் லெப்பர்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

குறிப்பாக 4 முதல் 6 மாத கால கர்ப்பமாக இருக்கும்போது வலி நிவாரண மாத்திரை எடுத்துக்கொண்டால் அது ஆண் குழந்தைகளின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் வாய்ப்பு 2 மடங்கு அதிகம் ஆகும்.

வலியை வேகமாக குறைப்பதற்காக இந்த காலகட்டத்தில் 2 மாத்திரைகளை ஒன்றாக போட்டுக்கொண்டால், அதனால் ஏற்படும் பாதிப்பு 16 மடங்கு அதிகம் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல