திங்கள், 15 நவம்பர், 2010

சானியா மிர்சா பிறந்த நாள்

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்த சானியா மிர்சா ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் டென்னிஸ் விளையாட்டை 2003ஆம் ஆண்டு தொடங்கினார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு துறை பத்திரிகையாளரான இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா பிறந்தார். அவர் ஹைதராபாதில் ஒரு ஷியா முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். மிர்சா தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டை தொழிலாக்கிக் கொண்டார். அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஹைதராபாதில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பிடேறேஷன் கோப்பை குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி பட்டம் பெற்றார்.

மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து, மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார். அதற்கு முன்பு சனியா கிராண்ட் ஸ்லாம் தொடரில்2005ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளிப் போட்டியில் மஷோன வாஷிங்க்டன், மரியா எலேனா கமேரின் மற்றும் மரியான் பார்டோலி ஆகிய மூவரையும் வென்று நான்காம் சுற்றை அடைந்த முதல் இந்திய பெண்மணியாவார். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியிடம் ஜோடி சேர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாவார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல