திங்கள், 15 நவம்பர், 2010

ஓவியங்களால் வீடுகளை அலங்கரித்த "புதிய கற்கால' மனிதன்

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள், தங்கள் வீடுகளை ஓவியங்களால் அலங்கரித்தது தெரிய வந்துள்ளதாக,தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கற்காலத்தில், நாடோடிகளாக திரிந்த ஆதிமனிதன் குகைகளில் வசித்தான். பின்னர், நாகரிகமடைந்த புதிய கற்கால மனிதன் குடியிருப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு, குழுக்களாக வாழத் தொடங்கினான். அண்மையில், லண்டனில் தொல்பொருள்துறையினர் நடத்திய ஆய்வுகளில், புதிய கற்கால மனிதர்கள், தங்கள் வீடுகளை ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தியது தெரிய வந்துள்ளது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோமானியர்கள் தான் ஓவிய அலங்காரங்களை செய்ததாக தொல்பொருள் துறையினர் கூறிவந்தனர். ஆனால், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, புதிய கற்கால மனிதன், ஓவியங்களை வரைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆர்க்னே தீவுகளில், புதிய கற்காலத்தைச் சேர்ந்த 15 சிறிய குடியிருப்புகளை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 1980ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் தொல்பொருள் ஆய்வுகள் நடந்து வருகிறது. கடந்தாண்டு நடந்த ஆய்வுகளின் போது, வீடுகளில் இருந்த ஓவிய அலங்காரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.சிறு சிறு கற்களைக் கொண்டு, அடுக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடுகளின் வெளிச்சமான பகுதிகளில், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களைக்கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. விலங்குகளின் கொழுப்பு மற்றும் முட்டை ஆகியவற்றைக்கொண்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. ஓவியங்கள் கொண்ட குடியிருப்புக்கள் அனைத்தும் கோவிலுக்கு அருகே இருந்தவையாகும்.

இதுகுறித்து, ஆர்க்னே தொல்பொருள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த நிக் கார்டு கூறுகையில், "இது மிகவும் சாதாரண கண்டுபிடிப்புதான். கோவிலுக்கு அருகே ஏழு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இதுகுறித்து, மேலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன' என்று தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல