புலிகளால் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 20 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில் இலங்கை மன்ற கல்லூரியில் நடை பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, முஸ்லிம் மக்களுக்காக நாம் என்றுமே முன்னின்றோம், முஸ்லிம் மக்களுக்கு எதி ரான செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் சபையில் குரல் கொடுத்தோம். புலிகளினால் மிகக்கொடூரமான துன்பங்களுக்கு முகம் கொடுத்த முஸ்லிம் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தற்போதுள்ள அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிக்கும்.
புலிகளினால் வடக்கு மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான உரிமைகள் பெற்றுக்கொடுக்கும் வேளையில் இன,மத,மொழி பேதங்களை மறந்து சகல மக்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீண்டும் குடியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை விரைவில் நடைறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல மக்களுக்கு சேவையாற்றுகின்ற வேளையில் சகல மக்களுக்கும் ஒரே மாதியாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதனை அரச சார்பற்ற நிறுவனங்கள் புநரி்துகொள்ள வேண்டும். முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் அந்த பிரதேசத்திலிருந்து விரட் டப்பட்டனர். அவ்வாறு விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம் அகதி முகாமில் வருடக்கணக்கில் அகதிகளாக வாழ்ந்தனர்.
சிங்கள மக்கள் அவர்களின் உறவினர்கள் வீடுகளை தேடித்தேடி சென்று அவர்களின் குடும்பத்தில் வாழ்ந்தனர்.
அந்த முகாமில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்தனர். அந்த மக்கள் தொடர்பில் தேடியறிவதற்கும் அவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு எந்தவொரு அமைப்பும் முன்வரவில்லை. அதனால் அகதிகளாகவே அவர்கள் வாழ்ந்தனர். அகதிகளாக்கப்பட்டவர்களிலிருந்து வந்த அமைச்சர்களும் இன்றிருக்கின்றனர். அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகளாக இருந்தவர்கள் இன்று உங்களின் பிரதிநிதியாக இருக்கின்றனர். அதிலொருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்கின்றார். எவ்வாறாயினும் சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் நீங்கள் இன்று இலங்கையின் பிரஜைகள் நீங்கள் இழந்த உரிமைகளை பெற்றுக்கொடுப்பது எங்களுடைய பொறுப்பாகும்.
அவற்றை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அகதிகளாக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என எம்மால் பிரித்து பார்க்க முடியாது. அனைவரும் புலிகளினால் அகதிகளாக்கப்பட்டனர்.
அதேபோல அவர்கள் யாழ்ப்பாணமா? மன்னாரா? என்று பார்க்காமல் அவர்கள் அனைவரையும் சமமாக பார்ப்பது எங்களுடைய பொறுப்பாகும்.
விசேடமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களை பார்க்கும் போது சகலரையும் ஒரேமாதிரியாக பார்க்கவேண்டும் அதே போல நாட்டின் கொள்கை தொடர்பிலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் இழந்த உரிமைகள் உங்களுக்கு கிடைக்கவேண்டும். உங்களுடைய கிராமங்களுக்கு நீங்கள் மீண்டும் செல்லவேண்டும்.
அதனை நாங்கள் கூடிய விரைவில் செய்து முடிப்போம் என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக