திங்கள், 15 நவம்பர், 2010

விமான ஓடுபாதையால் இரணைமடுக் குளத்துக்கு ஆபத்து

கிளிநொச்சியிலுள்ள, முரசுமோட்டை, பரந்தன், தர்மபுரம், பெரியகுளம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், பரவைப்பாஞ்சான், தட்டுவன் கொட்டி, ஆனையிறவு, திருவையாறு, மூன் றாம் வாய்க்கால், நான்காம் வாய்க்கால், உருத் திரபுரம் போன்ற பல குடியிருப்புக்கள் இரணை மடுக்குளத்தை நம்பியே குடியேற்றத் திட்டங்களாக கொடுக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தமது சொந்தக் கிராமங்களை விட்டு யாழ்ப்பாணத் தின் 13 ம்.யூ.நு பிரிவுகளில் இருந்து வந்த மக் கள் கிளிநொச்சி காட்டுப்பிரதேசத்தை காடழித்து களனியாக்கினர். மலேரியா போன்ற நோய்களில் இருந்தும், விசகடி, யானைகளின் அச்சுறுத்தல் போன்ற அசாதாரண நிலை களிலிலிருந்தும் தம் உயிரைப் பணயம் வைத்து எம்மூத்த தலைமுறையினர் இப்பிரதே சங்களை நாடாக்கினர். அவர்களின் அயராத உழைப்பினாலும், அர்ப்பணிப்பான சேவையினாலும், தம் எதிர்காலம் நோக்கிய கனவு களினாலும்,இன்று அப்பிரதேசம் வளர்ச்சி கண்ட பூமியாக காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்திற்கு நீர்ப்பாசன ஊட்டம் தந்து அப்பிரதேசத்தை பசுமைப் பிதேசமாக்கிய பாரிய பணியில் இரணைமடுக்குளம் முன்னிலை வகிக்கின்றது.

இரணைமடுக் குளத்திற்கு அண்மையில் ஒரு பாரிய விமான ஓடுபாதை உருவாக்கப் படுவதாகவும் இலங்கையில் மூன்றாவது பெரிய விமானநிலையமாக அது உருவாக் கப்படும் எனவும் இலத்திரனியல், பத்திரிகை ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இரணைமடுக் குளத்தில் அணைக்கட்டு ஏலவேபாதிப்புக்குள்ளானதாகவே காணப்ப டுகின்றது. பொருத்தமற்ற போக்குவரத்து நட வடிக்கைகளாலும், யுத்தத்திற்குப் பிந்திய சுற்று லாப் பிரயாணிகளாலும் இவ் அணைக் கட்டு படிப்படியாகச் சேதமடைந்து வருவதாக குறிப் பிடப்படுகின்றது. இந்நிலையில் பாரிய அதிர் வுச் சக்திகளை கொண்ட விமானங்கள் இரணை மடுக்குளத்திற்கு அண்மையில் வந்திறங்குமானால் இரணைமடுக்குளத்தில் அணைக்கட்டு முற்றாக சேதமடையும் என்பதில் ஐயமில்லை.

எனவே கட்சி, கருத்துப் பேதங்களுக்கு அப் பால், உண்மை நிலையை உணர்ந்து விமான ஓடுபாதை, விமான நிலையம் ஏற்படுதலுக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகின்றோம். இல்லையேல் கிளி நொச்சி மாவட்டத்தின் மொத்தக் குடியேற்றங் களின் 2/3 பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு நீர்ப்பாசனமற்று பயிர்ச்செய்கைக்குள்ளாகா மல் வறண்டு பாலைவனமாகப் போகும் வாய்ப்புள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்த சிறி தொரு விமான ஓடுபாதை ஓரளவு இரணைம டுக்குளத்தின் அணைக்கட்டுக்கு பாரிய அதிர் வைத் தந்திருந்தது. அந் ஓடுபாதையை பெருப் பிக்கவேண்டும். அங்கு ஒரு பாரிய விமான நிலைய ஓடுபாதையை அமைக்கவேண்டும் என்று போட்டியடிப்டையில் சிந்திக்காது அய லில் அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழும் மக்கள் குளத்து நீர், அணைக்கட்டு என்பவற் றை பற்றி சிந்தித்து தீர்மானம் எடுத்து செயற் படுதல் பொருத்தமானதாக இருக்கும்.

இந்தக் கருத்து ஒரு கட்சியினுடையதோ, ஒரு குழுவினுடையதோ அல்ல. இப்பிரதேசத் தினுடைய கல்வி, பொருளாதார, சமூக, அபி விருத்தியோடு தொடர்பான அப்பிரதேச மக்க ளின் கோரிக்கை. 225 நாடாளுமன்ற உறுப் பினர்களும், கெளரவ ஜனாதிபதியும் இக்கோரிக் கையில் அக்கறையயடுத்து இந்நடவடிக் கையை தடுத்து நிறுத்தி இரணைமடுக் குளத் தையும் அதன் அணைக்கட்டையும் மேலும் வலுவுள்ளதாக்குவதற்கு நடவடிக்கை எடுப் பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகின்றோம்.

தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கைகளால் தோற் றுப்போனவர்கள் நாங்கள். ஆகக்குறைந்த பட்சம் எங்கள் இருப்புக்களையும், எங்கள் வளங்களையும், எங்கள் சூழலையும் பொருத் தப்பாடுடன் வைத்திருப்பதற்கு முயற்சியுங்கள். நாளைய சந்ததி அதற்காக நன்றியுடன் இருக்கும்.

எம்.கணபதிப்பிள்ளை பிரதி அதிபர் றோயல் கல்லூரி கொழும்பு
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல