திங்கள், 1 நவம்பர், 2010

மிகப்பெரிய வைன்கிண்ணம் (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகப் பெரிய “வைன்' குடிபான கிண்ணத்தை தயாரித்து லெபனானியர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

பெய்ரூட் நகரில் இடம்பெற்ற “வைன்' திருவிழாவிலேயே இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1.51 மீற்றர் உயரம், 1.46 மீற்றர் அகலம் உடைய இந்த வைன் கிண்ணம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நூறு வைன் போத்தல்களிலுள்ள வைனை ஊற்றி நிரப்பப்பட்டது.

இந்த வைன் கிண்ணத்தை தயாரித்ததன் மூலம் இதற்கு முன் போர்த்துக்கல்லைச் சேர்ந்தவர்களால் நிறைவேற்றப்பட்டு 12 வருட காலமாக முறியடிக்கப்படாது இருந்த உலக சாதனையை லெபனானியர்கள் முறியடித்துள்ளனர்.

அவர்களது சாதனை “கின்னஸ் உலக சாதனை' பதிவாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல