திங்கள், 1 நவம்பர், 2010

நான் அவருடைய களியாட்ட விருந்துபசாரங்களில் கலந்து கொண்டது உண்மை

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனியின் அர்கோரிலுள்ள வசிப்பிடத்தில் அவருடன் பிரத்தியேக களியாட்ட விருந்துபசாரங்களில் கலந்து கொண்டதாக மொரோக்கோவைச் சேர்ந்த கரீமாகெயெக் என்ற 17 வயது கவர்ச்சிப் பாவை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இளம் யுவதிகளுட னும் விலைமாதுக்களுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ளதாக பெர்லுஸ் கொனி (74 வயது) குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், அவரது தனிப்பட்ட உல்லாச அந்தரங்க வாழ்வு தொடர்பான புதிய சர்ச் சையை மொரோக்கோ அழகியின் இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

““நான் அங்கிருந்து (பெர்லுஸ்கொனியின் இல்லத்திலிருந்து) நள்ளிரவுக்கு முன் வெளியேறினேன். நான் எனது பிரச்சினைகளை அவரிடம் கூறினேன். அவர் மிகவும் குழப்பம டைந்தவராக காணப்பட்டார். அவர் எனக்கு 7,000 யூரோக்களையும் வைர ஆபரணமொன்றையும் அன்பளிப்பாக வழங்கினார். அன்றைய தினத்துக்கு பின் நான் அவரை சந் திக்கவில்லை'' என ரூபி ருபோ கோரி என அழைக்கப்படும் கரீமா கெயெக் என்ற மேற்படி அழகி தெரி வித்தார்.

““எனது வயது 17 என அவரிடம் (பெர்லுஸ்கொனியிடம்) நான் கூறியபோது, தனக்கு ஏற்கனவே என் போன்ற சிறு வயது பெண்களால் பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறினார். அவர் மிகவும் இனிமையானவர்'' என கரீமா கெயெக் கூறினார்.

மதமாற்றம் செய்ய விரும்பிய தந்தையிடம் தப்பிக்கும் முகமாக 14 வயதில் குடும்பத்தை விட்டு தான் வெளியேற நேர்ந்ததாக அவர் கூறினார்.

திருட்டு மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் உறவினர் எனப் பொய் கூறியமை போன்ற குற்றச்சாட்டுகளில் கரீமா இத்தாலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட போதே பெர் லுஸ்கொனி கரீமா பற்றி முதன் முதலாக அறிய நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதன்போது பெர்லுஸ்கொனி பொலிஸாருடன் தொடர்பு கொண்டு கரீமாவை விடுதலை செய்யப் பணித்துள்ளார். அதைத் தொடர்ந்தே பெர்லுஸ்கொனியின் இல்லத்தில் நடைபெற்ற களியாட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள கரீமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.

பெர்லுஸ்கொனியோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலைப்படாமல் அது தொடர்பில் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தான் வாழ்க்கையையும் பெண்களையும் நேசிப்பதாக தெரிவித்த பெர்லுஸ்கொனி, இளம் பெண்களுடனான உல்லாச களியாட்டம், விருந்துபசாரங்கள் என்பன உள்ளடங்கலாக தன்னைப் பற்றி பத்திரிகை களின் முதல் பக்கங்களில் வரும் செய்திகளை பார்த்து இரசித்ததாகவும் அதற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் கூறி னார்.

கரீனாவுடன் தனது இல்லத்தில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்ததை தான் மறுக்கப் போவதில்லை எனத் தெரிவித்த பெர்லுஸ்கொனி, ““நான் ஒரு விளை யாட்டுத்தனமான ஆள். நான் வாழ்வையும் பெண்களையும் மிகவும் நேசிக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

அலுவலகப் பணி அழுத்தங்களுக்கு பின் பொழுதை இனிமை யாக கழிப்பதை தான் வழமையாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ““மாலை வேளையில் ஓய்வாக இருப்பது தேவையாகவுள்ளதாக நான் அன்றும் இன்றும் உணர்கிறேன். மனதிலுள்ள கவலைகளைக் களைந்து மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகிறது.

அது எனது ஆளுமையின் ஒரு அங்கம் என கருதுகிறேன்'' என்று கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல