திங்கள், 1 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளைய தினம் கொழும்பில் கூடி இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பாகப் பேச விருக்கின்றது!

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளைய தினம் கொழும்பில் கூடி இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பாகப் பேச விருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேசுவதற்குத் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முயற்சிப் பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜி லிங்கம் கூறுகின்றார்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை நிலவாத காலமே கடந்த அறுபது வருட வரலாற்றில் கூடுதலானது. மிகவும் குறைவான ஒரு காலப் பகுதியிலேயே இக் கட்சி களுக்கிடையே ஒற்றுமை நிலவியது எனக் கூறலாம். தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்ததையே இங்கு குறிப்பிடுகின் றோம்.

அடுத்து வந்த தேர்தல் காலம் வரை மாத்திரமே அந்த ஒற்றுமை நிலைத்தது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேறித் தனியாகத் தேர்தலுக்கு முகங்கொடுத்தது. ஒற்றுமை நிலவிய காலத்தில் கூட யதார்த்தத்துக்கு முரணான தீர்வை முன்வைத்ததால் எதையும் சாதிக்க முடிய வில்லை.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை என்பதைக் கடந்த காலக் கசப்பான வரலாற்றிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஐக் கியமும் வேண்டும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுக் கோரிக்கையும் வேண்டும். இவையே அவ்விரு விடயங்களும். எல்லாக் கட்சிகளும் ஐக்கியப்பட்டாலும் யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கையை வலியுறுத் தினால் தீர்வு சாத்தியமாகாது. தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம்.

இப்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஒருபுறமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னொரு புறமாகவும் நிற்கின்றன. கூட்டாகச் செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஏற்கவில்லை.

ஐக்கியமான செயற்பாடு இன்று அவசியம் எனக் கூறும் போது எல்லா கட்சிகளும் ஒரே கொள்கையை ஏற்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இறுதித் தீர்வு எவ் வாறானதாக அமைய வேண்டும் என்பதையிட்டு மாறு பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம்.

சமஷ்டி என்று சிலர் சொல்லலாம். வேறு சிலர் கூட்டாட்சி எனலாம். எவ் வாறெனினும், இறுதித் தீர்வை உடனடியாக அடைய முடியாதென்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, இன்றைய நிலையில் உடனடியாகச் சாத்தியமான தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக எல்லாக் கட்சிகளும் ஐக்கியப்பட வேண் டியது ஒரு அவசியத் தேவை. ஐக்கியப்படுவதோடு நிற்காமல் யதார்த்தபூர்வமான கோரிக்கையையும் முன் வைக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மிக மோசமான துன்பங்களைக் கடந்து வந் திருக்கின்றார்கள். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய நினைவு அவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அவர்களுக்கு நிம்மதி தேவை. அந்த நிம்மதி ஸ்தாபன மயமானதாக இருக்க வேண்டியதும் அவசியம். இனப் பிரச்சினைக்கான ஒரு தீர்வின் மூலமே அது சாத்தியமாகும்.

தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட்டுச் சமகால யதார்த்தத்துக்கு அமைவான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அல்லலுற்று ஆற்றாது நிற்கும் மக்களுக்குத் தலைவர்கள் செய்ய வேண்டிய பிரதான உதவி இதுவே.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல