இத்தீயால் கொர்வாலிஸ் நகரிலுள்ள சல்மான் அல்பாறிஸி பள்ளிவாசலிலுள்ள ஒரு அறை முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் எவரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஒஸ்மான் மொஹமட்
போர்ட்லாண்டில் இடம்பெற்ற நத்தார் மரம் ஒளியூட்டும் நிகழ்வில் குண்டொன்றை வெடிக்க சதித் திட்டம் தீட்டிய குற்றச் சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சோமாலியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொஹமட் ஒஸ்மான் மொஹமட் (19 வயது) இந்த பள்ளிவாசலுக்குச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த பள்ளிவாசலுக்கு திட்டமிட்டே தீ வைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிராந்திய தீயணைப்பு திணைக்கள அதிகாரியான கார்லா புஸாடெறி தெரிவித்தார்.
இத்தீயை யார் வைத்தார்கள் என்பது தமக்குத் தெயாது எனக் கூறிய உள்ளூர் பொலிஸார், ஒஸ்மான் மொஹமட் மேற்படி பள்ளி வாசலுக்கு தொழுகைக்குச் சென்று வருவதை கருத்திற் கொண்டு அப்பள்ளிவாசலுக்கு தீ வைத்திருக்கலாம் என நம்புவதாக தெரிவித்தனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக