திங்கள், 13 டிசம்பர், 2010

மோ.சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து - இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கோயில் மதிலுடன் மோதி விபத்துக் குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணி யளவில் பன்னக்கட்டை பருத்தித்துரை விநா யகர் ஆலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதில் அதேயிடத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆனந்தகுமார் (வயது 25) என்ற ஒரு பிள் ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் கடை ஒன்றிலிருந்து வீட்டிற்குத் திரும் பிக் கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பன்னக்கட்டை விநாயகர் ஆலய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது சடலம் மரண விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனையின் பொருட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்ப டைக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல