திங்கள், 13 டிசம்பர், 2010

அழகு குறிப்புகள்

பெண்களுக்கான குறிப்புகள் மட்டும் அல்ல இவை. ஆண்களும் இவற்றைப் பின்பற்றலாம்.

1. தலைமுடி வளர:

அரை லிற்றர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெய்யை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.


2. வளமான தலைமுடிக்கு:

தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும் நிறுத்தும்.

3. முடி கொட்டுவது நிற்க:

ஒலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.

4.கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:

அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

5. பாத வெடிப்பு:

தொடர்ந்து கடுகெண்ணெய்யைத் தடவி வந்தால் சரியாகி விடும்.

6.தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:

தாமரை இலைகளைப் பறித்து சாறெடுத்துக் கொள்ளவும்.
அதற்குச் சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும்.
இதை தினம் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.

7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு பெக் தேவையான பொருள்கள்:

பாசிப்பயிறு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
கசகசா 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு 5 கிராம்
பூலாங்கிழங்கு 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை,
துளசி இலை மூன்றும் 2 கிராம்.

மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால் மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.

முகப்பரு அழகைப் பாதிக்குமா?

ஆம், உண்மைதான். அழகைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையும், எரிச்சல் போன்றவையும் ஏற்படக் காரணமாக இருக்கிறது.

அதுவும் முகப்பரு “ அடலசண்ட் “ பருவத்தில் ஏற்படுவதால் தோழிகளிடம் பழகுவதற்கே தயக்கம் ஏற்படும்.

தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் அதிகப்படியான கொழுப்புகள், எண்ணெய் பசையாக வெளியேற்றுகிறது. முகத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் இந்த எண்ணெய் பசையால் அடைக்கப்படுகின்றன.

சருமம் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறது. இந்த எண்ணெய் பசையில் படும் தூசு, காற்று இவற்றினால் பரு உருவாகிறது.

அடலசண்ட் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும், உடல் உஷ்ணம் அதிகரிப்பதினாலும், மலச்சிக்கலாலும் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு ஒரு வித தோல் வியாதியின் வகை என்றும் கூறலாம்.இந்த பருக்களை சொறிவதோ, கிள்ளுவதோ கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகவும், பருக்களின் வடுக்கள் நிரந்தரமாகத் தங்கி விடவும் வாய்ப்பு உண்டு.

ஓய்வில்லாமை, தவறான உணவுப்பழக்கம், போதைப் பொருள், மனக்கவலை போன்ற காரணங்களாலும் பருக்கள் தோன்றலாம். காலையில் போட்ட மேக்கப் கலைக்கப்படாமல் இருப்பதாலும் பருக்கள் உருவாகிறது. இரவு எந்நேரம் ஆனாலும் “ மேக்கப் “ ஐ கலைத்து விட்டு உறங்குவது என்ற நல்ல பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

வெள்ளக்காய்களை பச்சையாகவோ, சமைத்தோ அடிக்கடி சாப்பிடலாம். கீரைவகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடைகிறது. இளநீர் அதிகம் பருகலாம்.

ஓரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள தயங்கக்கூடாது. அடிக்கடி மருந்து மாத்திரைகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்படும்.

இதைத் தவிர்க்க எலுமிச்சைச் சாறுடன், சிறிது உப்பு, நீர் சேர்த்து பருகிவிட்டு, சிறிது காலாற நடக்கலாம்.

காலையில் சூரிய ஒளி படும்படி நிற்க , சூரிய ஒளி சக்தி பரு, கரும்புள்ளிகளை போக்குகிறது. பொடுகு இருந்தாலும் முகத்தில் பரு வரலாம்.

எனவே தலையை அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் வாரம் இருமுறை அலசி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

* 1 கிராம் புனுகு,1 அவுன்ஸ் நல்லெண்ணெய், சில துளி சந்தன தைலம் கலந்த கலவையைப் பஞ்சில் நனைத்து தடவலாம். விரல் நகம் படாமல் தடவ வேண்டும்.

*ஒஃபிளேம், ஆன்ட்டி பிளமிஷ் க்ரீம் தடவலாம்.

* வேப்பிலை அரைத்து தடவி ஊறியவுடன் பயத்த மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

* வெள்ளரியை விழுதாக்கி குளிரவைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும்.

1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு, மஞ்சள்தூள் இவற்றுடன் நீர் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி கழுவவும்.

*முகத்தில் பரு உள்ளவர்கள் மென்மையான “ சோப் “ பையே உபயோகிக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை இளஞ்சூடான நீரில் முகம் கழுவலாம். எளிதான, அளவான உடற்பயிற்சி கூட அவசியம்.

* முகத்தில் பருக்கள் போன்ற “மரு'வும் தோன்றுகிறது.

அதாவது கரும்புள்ளி, இவைக்கு, நெற்றி தாடைகளை உறைவிடமாக கொண்டுவரும் . இதுவம் பெரும்பாலும் முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையினால் தான் வரும்.

* இதில் தூசு படிந்து ஆரம்பத்தில் வெள்ளைப் புள்ளிகளாகவும், நாளடைவில் கரும்புள்ளிகளாகவும் மாறிவிடும். நாள்பட நாள்பட ஆழமான புண்ணாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.

இதற்கு “சிட்டி சோடியம் கார்பனேட்' ஐ இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் துண்டை நனைத்து பிழிந்து ஆவியை மட்டும் கரும்புள்ளி உள்ள இடங்களில் ஒற்றி எடுக்கவும்.

இதனால் துவாரம் இறுக்கம் தளர்ந்து விரிவடையும்.

இப்போது தோலில் உள்ள தூவாரங்கள் அடைக்கப்பட வேண்டும் எப்படி?

* முட்டையின் வெள்ளைக்கரு, மாய்ச்சரைஸ் க்ரிம் இரண்டையும் ஒன்றாக கலந்து தடவி லேசாக மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* ஓட்ஸ் மாவுடன் தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சில துளிகள் கலந்து தடவி மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* முல்தானி மட்டியுடன் நீர், வெள்ளச்சாறு கிடைக்காவிட்டால் எலுமிச்சைச் சாறு சிலதுளி கலந்து நன்கு குழைத்து முகத்தில் தடவவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீல் கழுவ வேண்டும். நீங்களும் அழகிதான்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க...

*வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளச்சாறு, புதினா சாறு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல