இந்த 25 நிமிட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது கணவன் படுகொலையில் தனக்குள்ள வகிபாகம் குறித்து அஷ்தினா விபரித்தார்.
இதன்போது தனது கணவருக்கு தன்னால் ஊசி மருந்தை ஏற்றப் பயன்படுத்தப்பட்ட ஊசியொன்றையும் காண்பித்தார்.
வடமேற்கு ஈரானிலுள்ள ஒஸ்கொயு எனும் சிறிய நகரிலுள்ள தனது வீட்டில் வைத்து தனது கணவருக்கு மயக்க மருந்தை ஏற்றியதாகவும் அவர் மயக்கமடைந்ததும், தனது காதலரான இஸா தாஹெரி அவரை மின்சார தாக்குதலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததாகவும் அஷ்தியானி தெரி வித்தார்.
“மயக்கமருந்து ஏற்றப்பட்டதும் சுமார் 20 நிமிடங்களாக அவர் மயக்க நிலையில் இருந்தார். இதன்போது இஸா என்னுடன் அழைப்பை ஏற்படுத்தி எனது கணவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டாரா என என்னிடம் வினவினார்'' என இரு பிள்ளைகளின் தாயாரான அஷ்தியானி (43 வயது) தெரிவித்தார்.
“நான் எனது கணவர் மயக்கமடைந்துவிட்டதாக கூறியதும் இஸா எனது வீட்டுக்கு வந்து எனது கணவரின் கைகளையும் கால்களையும் கட்டி, மின் கம்பி மூலம் அவரை 6 தடவைகள் மின்சார தாக்குதல்களுக்கு உள்ளாக்கினார். எனினும் அவரது உடலில் அசைவு காணப்பட்டது. இதனால் ஏழாவது தடவையும் அவருக்கு மின்சார தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உயிர் பிரிந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.
மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, அஷ்தியானியின் வழக்கு நீதிறைமையொன்றினூடாக செயற்படுத்தி வருவதாகவும் அவருக்கு அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆனால் அஷ்தியானி விடுதலை செய்யப்படுவாரா என்பது குறித்து தகவல் எதனையும் அந்த தொலைக்காட்சியூடகமும் வெளி யிடவில்லை.
அஷ்தியானியின் மகனான சாஜத் கடெர் ஸாடெஹ்ஹும் சட்டத்தரணியான ஹோடன் கியானும் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் குழுக்கள் பலவும் அஷ்தியானியிக்கு கல்லால் எறிந்து மரணதண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக