திங்கள், 13 டிசம்பர், 2010

அமெரிக்க நிதி மோசடியாளரின் மகன் தூக்கிட்டு தற்கொலை (படங்கள் இணைப்பு)

மார்க் மாடோப்
பழைய முதலீட்டாளர்களின் நிதியை பயன்படுத்தி புதிய முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கும் மோசடியான நிதி நிறுவனத்தை நடத்தி உலகளாவிய தியில் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க முதலீட்டாளர் பெர்னார்ட் மாடோப்பின் மகன்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெர்னார்ட் மாடோப்
தனது தந்தையான பெர்னார்ட் மாடோப் (72 வயது) கைது செய்யப்பட்டு இரண்டாவது ஆண்டு தினமான சனிக்கிழமை அவரது மகன்களில் ஒருவரான மார்க் மாடோப் (46 வயது) நியூயோர்க்கிலுள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெர்னார்ட் மாடோப்பின் 65 பில்லியன் அமெரிக்க டொலர் பண மோசடி தொடர்பான வழக்கில் அவரின் மகன்களான மார்க் மாடோப்பும் அன்ட்ரூ மாடோப்பும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் இதுவரை சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னார்ட் மாடோப், அவரது மனைவி ரூத் மடோப் மற்றும் அவரது மகன் மார்க் மடோப்

பெர்னார்ட் மாடோப்பின் நிதி மோசடி காரணமாக தமது குடும்பத்தினருக்கு உலகெங்குமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து மார்க் மாடோபின் மனைவி இந்த வருட ஆரம்பத்தில் தனது குடும்பப் பெயரை மாற்ற நீதிமன்ற அனுமதியைக் கோரியிருந்தார்.

அதே சமயம் தனது குடும்பத்துக்குய மோசடி நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மார்க் மாடோப்பிற்கு எதிராக முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாக்க தவறியமைக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெர்னார்ட் மாடோப்புடன் இணைந்து செயற்பட்ட ஜெப் பிகோவரும் வழக்குத் தாக்கலை எதிர்கொண்ட நிலையில் புளோரிடா மாநிலத்திலுள்ள நீச்சல் குளமொன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் சடலமாக மீட்கப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல