திங்கள், 13 டிசம்பர், 2010

அதலபாதாளத்தில் விக்கிலீக்ஸின் ஆவணங்கள் (படங்கள் இணைப்பு)


அமெரிக்காவின் இராணுவ மற்றும் தூதரக இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந் நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் மீது சுவீடனில் 2 பெண்களைக் கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் லண்டன் பொலிஸார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.


இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளம் திரட்டிய இரகசிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி தற்போது தகவல்கள் வெளி வந்துள்ளன.

சுவீடனின் ஸ்டொக்ஹோம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் “பையனென்“ என்ற தகவல் மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் இரகசிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் மையத்தில் உள்ள சூப்பர் சர்வர்கள், பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. பெரிய குகை போல் காணப்படும் இந்த தகவல் மையம் கிரானைட்டைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது.

இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடிக் கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் ஆகியவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன. மேலும் செயற்கையான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த உயிருள்ள செடிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைந்துள்ளன.


விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல