சனி, 8 ஜனவரி, 2011

அம்பாறையில் 15 வயது சிறுவன் கடந்த 4 நாட்களாக மாயம்

அம்பாறை, திருக்கோவில், வினாயகபுரத்தில் 15 வயது பாடசாலை மாணவன் கடந்த 2ஆம் திகதி மாலை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வினாயகபுரம் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெயசீலன் ஜெகன் என்ற மாணவன் கடந்த 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு பாடசாலையை துப்பரவு செய்ய என வீட்டைவிட்டு சென்றுள்ளார்.

எனினும் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் கடந்த 4ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணமல் போன மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல