யாழ் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்ப்பாணம் வர்த்தக கழகப் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேபோன்று அண்மையில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற களவுகள், கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களின் பின் தனிப்பட்ட காரணங்களே காணப்படுகின்றன. இத்தகைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமே அதனைக் கட்டுப்படுத்த முடியுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி நின்று இளைஞர்கள் வீதியால் செல்லும் பெண்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவிகளின் மீது பகிடி செய்யும் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை அங்கீகரிக்க முடியாது. இத்தகையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் இதேபோன்று சைக்கிள்கள் சமாந்தரமாக வீதிகளில் செல்வதும் கூட விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் இதற்கு உதவியாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமது சார்பில் குறிப்பிட்டளவு பாதுகாப்பு அலுவலர்களை வழங்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து வர்த்தக நிலையங்களை பாதுகாக்க வசதியாக இருக்கும். வணிகர் கழகம் உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் கூட யாழ். நகரப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். பெண்கள் தமது நகைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இதற்கு வசதியாக பெண்கள் தமது நகைகளை வங்கிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் இதற்குப் பதிலாக கவரிங் நகைகளை அணிந்து செல்லலாம். இதனை யாரும் பிடித்து பார்க்கப்போவதில்லை. தமிழ் பெண்களுக்கு தாலி என்பது மிகவும் முக்கியமானதாகும் இதனை திருடனிடம் கொடுத்து விட்டு கதறி அழுவதினால் எந்தவகையான பயனும் எற்படப்போவதில்லை.
ஆகையினால் ஒவ்வொருவரும் தமது விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். ஏதாவது சந்தேகத்திற்கு உரிய முறையில் நடமாடுபவர்கள் புதியவர்களின் நடமாட்டங்கள் காணப்பட்டால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இதே போன்று விடுகளில் இரும்புக் கம்பிகளை கட்டி வைத்தால் சந்தேகத்திற்கு உரியவர்களின் நடமாட்டங்கள் காணப்பட்டால் சத்தத்தை உண்டாக்கி அனைவரும் இணைந்து திருடர்களை விரட்ட முடியும் எனவும் நெவில் பத்மதேவ தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக