சனி, 8 ஜனவரி, 2011

புலிகள் விசேடமாக வடிவமைத்த துப்பாக்கியை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்!

யுத்த காலத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி 56 ரக துப்பாக்கியொன்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயண பொதியொன்றில் மறைத்து இந்த துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் துப்பாக்கியுடன் 48தோட்டங்களையும் தாம் மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் துப்பாக்கியை தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் தலா இரண்டு லட்சம் ரூபா வாடகைக்கு கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புலிகள் இந்த துப்பாக்கியை விசேடமான முறையில் வடிவமைத்துள்ளதாகவும் காவற்துறையினரோ, இராணுவத்தினரோ இவ்வாறான துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெவிநுவர பிரதேசத்தின் மீன் வியாபாரி ஒருவரே தபால் ஊழியருக்கு துப்பாக்கி கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

இந்த தகவலையடுத்து, அந்த வியாபாரியை கைதுசெய்ய சென்ற வேளையில் அவர் மீன் லொறியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். லொறியை கங்கதர காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான தபால் ஊழியர் தந்திகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல