சனி, 8 ஜனவரி, 2011

ஆண்களின் ஆடைகளை தேர்வு செய்யும் பெண்கள்

பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்வதற்கு பெண்களின் உதவியை நாடுகின்றனர் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரித்தானியாவில் உள்ள விசிட் பிர்மிங்காம் காம் இணையத்தளம் சார்பில், ஆடைகளை தேர்வு செய்வதில், ஆண்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இதற்காக 1,000 பேர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், தங்களுடன் மனைவி அல்லது அம்மாவையும் ஆண்கள் ஆடையகங்களுக்கு அழைத்து வந்தனர். அதுபோல், தங்களுக்கு என்ன ஆடை பொருத்தமாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை.

என்ன உடைகள் வாங்க வேண்டும் என்பது பற்றியும் அவர்களின் அம்மா அல்லது மனைவிதான் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர் மனைவி சொல்வதையே ஏற்று, அவர்கள் சொல்லும் ஆடைகளையும் வாங்குகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல