திங்கள், 3 ஜனவரி, 2011

160 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் சூப்பர் துப்பாக்கி

அமெரிக்க விஞ்ஞானிகள் 160 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இலக்கை தாக்க கூடிய ஒரு சூப்பர் துப்பாக்கியை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் இருந்து கிளம்பும் குண்டு ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடியது. இந்த துப்பாக்கியை வர்ஜீனியாவில் உள்ள நேவல் சர்பேஸ் வார்பேர் செண்டரில் அமெரிக்க ராணுவம் சோதித்து பார்த்தது. இந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் குண்டு 160 கி.மீ. தூரத்தையும் 5 நிமிடத்தில் கடந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

இந்த துப்பாக்கி எலக்ட்ரோ மேக்னடிக் (மின்காந்த) ரெயில் கன் ஆகும். இதில் இருந்து கிளம்பும் குண்டு 33 மெகாஜோல்ஸ் சக்தியை வெளிப்படுத்தும்.

இந்த குண்டு கன்பவுடரால் நிரப்பப்பட்டு இருக்காது. இது மின்சார சக்தியை கொண்டது. இது வெடித்து சிதறாது. இது இலக்கை துளைத்து அழித்துவிடும். இப்போது அமெரிக்க போர்க்கப்பல்களில் பொருத்தப்பட்டு உள்ள பீரங்கிகள் 20 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்க கூடியது. இந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பான தொலைவில் இருந்து எதிரிகளை அழிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வருவதற்கு 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல