திங்கள், 3 ஜனவரி, 2011

வெளிநாட்டு தம்பதியினரின் ஆலோசனைப்படி கடனட்டை மோசடி செய்த இலங்கையர்கள் இருவர் கைது

போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்கள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போலி கடனட்டைகளையும், கைத்துப்பாக்கியொன்றையும் காலி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடனட்டைகளின் தகவல்கள் மற்றும் அவற்றின் இரகசிய இலக்கங்கள் என்பவற்றை சூட்சுமமான முறையில் களவாடி, ஏராளம் போலி கடனட்டைகளை அவர்கள் தயாரித்து கொள்ளைகளை மேற்கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பு தொடக்கம் காலி வரையிலான அரச மற்றும் தனியார் வங்கிகளிலிருந்தே சந்தேகநபர்கள் அடுத்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

ருமேனியாவைச் சோ்ந்த தம்பதினரின் வழிகாட்டலின் படி இவர்கள் கடனட்டைகளின் தகவல்களைத் திருடும் இயந்திரம், நுண்ணிய கமெரா என்பவற்றைக் கையாளவும், அவற்றின் மூலமாகத் தகவல்களைத் திரட்டவும் பயின்றுள்ளனர். சந்தேகநபர்களான ருமேனியத் தம்பதி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இருபத்தி ஐயாயிரம் யூரோக்கள் மற்றும் நான்கு இலட்சத்துக்கும் மேலான இலங்கை பணம் என்பனவற்றை காலி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல