திங்கள், 3 ஜனவரி, 2011

பள்ளியில் பாடம் நடத்துகிறது ரோபோ

தென் கொரிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது ரோபோ. கொரிய அறிவியல் தொழில்நுட்ப மையம் (கே.ஐ.எஸ்.டி.) மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரக்கூடிய நவீன ரோபோவை தயாரித்துள்ளது. வெள்ளை நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும் அந்த ரோபோ, ஒரு மீட்டர் உயரம் கொண்டது. அதில் டிவி திரை போல முகப் பகுதி உள்ளது. வகுப்பறை முழுவதும் சுற்றி வரும் வகையில் சக்கரங்கள் மற்றும் கைகள், தலையை அசைக்கும் வசதி உள்ளது.

இதுகுறித்து கே.ஐ.எஸ்.டி.யின் மூத்த விஞ்ஞானி சாகாங் சியாங்& கூறுகையில், சோதனை முயற்சிக்காக 21 தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த ரோபோ வழங்கபட்டுள்ளது. சிறந்த திறமை, அனுபவம் நிறைந்த பிலிப்பைன்சில் உள்ள ஆங்கில ஆசிரியர்களால் ரிமோட் மூலம் ரோபோ இயக்கப்படும். வகுப்பறையில் பாடப் புத்தகத்தை வாசித்தல், பாட்டு படித்தல் போன்றவற்றை ரிமோட் மூலமே ஆசிரியர் மேற்கொள்ளலாம். மாணவர்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு ரோபோ உடனடியாக பதில் சொல்லும் என்றார்.

கல்வித்துறை அதிகாரி கிம் மியாங் கூறுகையில், ரோபோ வகுப்பறையில் அங்கும் இங்குமாக சென்று பாடம் எடுப்பதை மாணவர்கள் ஆர்வமுடன், ரசித்து கவனிக்கின்றனர். ஒரு இயந்திரத்துடன் பேசுவதை மறந்து, மனிதனிடம் பேசுவதை போலவே அவர்கள் உணர்கிறார்கள். அதனால், பாடத்தில் அதிக கவனம் காட்டுகின்றனர் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல