திங்கள், 3 ஜனவரி, 2011

வடமராட்சியிலேயே அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் பதிவு

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் வடமராட்சிப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.

இதில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நெல்லியடியில் ஆரம்பித்த கொலைச் சம்பவம் கடந்த வருடம் இறுதிநாள் குடத்தனையில் முடிவுற்றுள்ளது. அதுமட்டுமன்றி கொள்ளையர்களின் கொலை வெறியாட்டத்தினால் இதுவரை வடமராட்சிப் பிரதேசத்தில் ஏழு கொலைச் சம்பவங்கள் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.

6 கடத்தல் முயற்சிச் சம்பவங்கள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களும் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன. கடந்த வருட இறுதி நாள் அல்வாய் கிழக்குப் பகுதியில் குடும்பப் பெண் ஆயுத முனையில் கடத்தப்பட்டமை மக்களை மீண்டும் போர்க்காலச் சூழலுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறுமானால் மக்கள் மீண்டும் துன்ப துயரங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல