திங்கள், 3 ஜனவரி, 2011

யாழில் பெண்கள் வீடுகளில் நடமாட முடியாத நிலை

யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள், காணாமல் போனமை தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் யாழ் மாவட்ட இராணுவத் தரப்பு மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

புத்தாண்டை அடுத்து படையதிகாரிகள் மற்றும் பொலிஸார் தமது சொந்த இடங்களான தெற்கிற்கு சென்றிருக்கின்றார்கள். அவர்கள் கடமைக்கு திரும்பி வர வேண்டும். அவர்கள் வந்தவுடன் இந்த உயர்மட்ட மகாநாடு இடம்பெறும் எனுவம் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தான் திடீரென குடாநாட்டின் நகரப் பகுதிக்கு நேற்று சென்று இரவிரவாகப் பார்வையிட்டதாகவும் பல இடங்களில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் பல இடங்களில் குற்றச்செயல்கள் மோசமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும் அரச கட்சிகளின் ஒத்துழைப்பினை நபர்கள் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக பெண்கள் வீடுகளில் நடமாட முடியாத நிலை இரவு நேரத்தில் முற்றாக ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதனை அனுமதிக்க முடியாது. கைதுகள், காணாமல் போதல்கள் படுகொலைகள் என்பன தொடர்பில் குடாநாட்டு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அபிவிருத்தி தொடர்பாக பேசுவது பொருத்தமானது அல்ல. உடனடியாக இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கு படைத்தரப்பினரினும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே அவசர மகாநாட்டிற்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல