இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
விவேகானந்தரின் கருத்துக்கள்
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
விவேகானந்தரின் பொன்மொழிகள்
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லை என்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே.
குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
--------------------------------
1908: முதல் தடவையாக நீண்ட தூர வானொலி சமிக்ஞையொன்று ஈபிள் கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.
1915; பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது
1932: அமெரிக்காவின் முதலாவது பெண் செனட்டராக ஹெட்டீ டபிள்யூ. கராவே தெரிவு செய்யப்பட்டார்.
1976: பலஸ்தீன விடுதலை இயக்கம் ஐ.நா. பாதுகாப்புச் சபை விவாதத்தில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிப்பதற்கு பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கியது.
1991: ஈராக்கில் அமெரிக்கப் படைகளை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
1991: ஆபிரிக்க நாடான மாலியில் அரசியல் கட்சிகளை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கும் புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்களிப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1998: மனித குளோனிங்கை தடை செய்வதை ஐரோப்பாவின் 19 நாடுகள் இணங்கின.
2004 உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான குயின்மேரி-2 தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.
2006: சவூதி அரேபியாவின் மினா நகரில் சன நெரிசலில் சிக்கி 362 யாத்திரிகர்கள் பலியாகினர்.
2010: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை சுட்ட மெஹ்மட் அலியை 25 வருடங்களுக்குப் பின் துருக்கி விடுதலை செய்தது.
2010: ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 230,000 பேர் பலி.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக