“ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹு ஸைன், தனது இரு மகன்மாரும் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் முகமாக எனது இரு மகள்மாரையும் கொல்வதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தார்'' என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் தெரிவித்தார்.
“ஏ. பி. சி.' ஊடகத்தின் “குட் மோர்னிங் அமெரிக்கா, நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சதாம் ஹுஸைனின் மகன்மாரான உதேயும், குஸேயும் அவரது பேரனான முஸ்தபாவும் (14 வயது) அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டதற்கு பின் இடம் பெற்ற கூட்டத்திலேயே சதாம் ஹுஸைன் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
டொனால்ட் ரம்ஸ்பீல்டின் இரு மகள்மாரின் தலைகளையும் கொண்டு வரும் எவரும் மேற்படி சன்மானத்தை பெற முடியும் என சதாம் ஹுஸைன் இதன் போது குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையொத்த அச்சுறுத்தலை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் மகள்மாரான ஜெனாவும் பாபராவும் எதிர்கொண்டிருந்தனர். ஆனாலும் ஜனாதிபதி என்ற வகையில் புஷ் தனது மகள்மாருக்கு இரகசிய பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் அத்தகைய சிறப்புரிமை தனக்கு வழங்கப்படாததனால் தானும் தனது குடும்பத்தினரும் பெரும் அச்சத்தில் வாழ்ந்ததாக டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
டொனால்ட் ரம்ஸ் பீல்ட் 2006 ஆம் ஆண்டு தான் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையான அனுபவங்களை உள்ளடக்கி வெளியிடவுள்ள “அறிந்ததும் அறியாததும்' என்ற கருப்பொருளிலான நூலின் வெளியீட்டையொட்டியே அவரது இந்தப் பேட்டி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக