வெள்ளி, 5 அக்டோபர், 2012

வேர்ட் டாகுமெண்ட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது....

வேர்ட் டாகுமெண்ட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, ஒரு திருத்தத்திற்கேற்றார் போல, இன்னொரு இடத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஒரே திரையில் இரண்டாகப் பிரித்து வைத்து செய்திட முடியுமா?

பொதுவாக டாகுமெண்ட் முழுமையும் தரப்பட்டுள்ள தகவல்கள் சீராக அமைய வேண்டுமானால், இது போல ஒன்றையொன்று சார்ந்து எடிட் செய்திடும் சூழ்நிலை ஏற்படும். இதற்காக ஒவ்வொரு முறையும் நாம் பக்கங்களிடையே அலைய முடியாது. இதற்கெனவே வேர்ட் ஸ்பிளிட் எடிட்டிங் வசதி தருகிறது. ஒரே டாகுமெண்ட்டை ஒரே திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறக்கும் வசதியைத் தந்துள்ளது.

எந்த வேர்ட் டாகுமெண்ட்டில் இது போல இரண்டு இடங்களில் எடிட் செய்திட வேண்டுமோ அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் “Window” என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் Split” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது படுக்கை வாட்டில் ஒரு கோடு கிடைக்கும். இந்த கோடு உங்கள் மவுஸ் கர்சருடன் சேர்ந்து மேலும் கீழும் செல்லும். இக்கோட்டினை உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்து கிளிக் செய்து நிலை நிறுத்தவும்.
இப்போது டாகு மெண்ட் இரு பிரிவுகளில் முழுமையாக இருப்பதனைக் காணலாம். நீங்கள் ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டிய இரு இடங்களை இந்த இரண்டு பிரிவுகளில் வைத்துக் கொண்டு திருத்தலாம். அப்படி திருத்துகை யில் இந்த இரு பிரிவுகளிலும் காணப்படும் டாகுமெண்ட்டில் திருத்தங்கள் ஏற்படுவதனைக் காணலாம். இப்படி ஒரு பிரிவைப் பார்த்துக் கொண்டே இன்னொரு பிரிவில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். பிரித்ததை மீண்டும் ஒட்டிப் பார்க்க மீண்டும் விண்டோ மெனு சென்று “Remove Split” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல