வெள்ளி, 5 அக்டோபர், 2012

சவூதியில் மத பொலிஸாரின் அதிகாரங்கள் குறைப்பு

சவூதி அரேபியாவில் மத பொலிஸார் (முதாவா) அத்துமீறி நடப்பதால், அவர்களது அதிகாரத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சவூதி மத பொலிஸாரின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி கைது, விசாரணை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் மத பொலிஸார் ஏனைய அரச நிர்வாகத்திடம் பொறுப்பளிக்கும் வகையில் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக மத பொலிஸாரின் தலைவர் அப்துல் லதிப் அப்துல் அkஸ் அல் ஷெய்க், ‘அல் ஹயாத்’ பத்திரிகைக்கு தெரிவித்து ள்ளார். சவுதியில் மத பொலிஸார் அங்கு மத நடவடிக்கை களை நடைமுறைப்படு த்துவதற்கான உச்ச அதிகாரம் கொண்ட வர்களாவர். எனினும் இவர்களது அத்துமீறிய செயல்களால் சவூதி பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பெண் நகத்தில் சாயம்பூசி இருந்ததற்காக வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார். இது தொடர்பாக அந்தப் பெண் பொலிஸாருடன் நடத்திய வாக்குவா தத்தை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து இணையத்தளத்தில் வெளியிட்டார். அதேபோன்று வானொலிப் பெட்டியை மூட மறுத்த ஒருவரை முதாவாக்கள் துரத்திப் பிடிக்க முயன்ற போது ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலியானார். இதனால் மத பொலிஸார் மீதான மக்கள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் அதன் தலைவராக ஷெய்க் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார். மத பொலிஸாரை நல்லொழுக்க மற்றும் தடுப்பு மேம்பாட்டு ஆணையம் என்றும் அழைக்கப்படும்.

இவர்கள் பெண்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பது, உடை கட்டுப்பாடுகளை நடைமுறைப்ப டுத்துவது, களியாட்ட நிகழ்வுகளு க்கான தடைகளை நடைமுறைப்ப டுத்துவது, ஐந்து நேர தொழுகையின் போதும் வியாபாரத் தளங்கள் அடைக்கப்படுவதை உறுதிப்படுத்துவது ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் ஷெய்க் தலைமைப் பொறுப்பை ஏற்று இருவாரத்திற்குள் மதப்பொலிஸில் தொண்டர் பணியாளர்களுக்கு தடை விதித்தார். பின்னர் சாதாரண பொது மக்களுக்கு தொந்தரவு இழைக்கும் மத பொலி ஸார் தண்டிக்கப்படுவர் என அவர் கடந்த ஏப்ரலில் எச்சரிக்கை விடுத் தார். இந்நிலையில் அவர் முதாவாக்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையை செயற்படுத்தியுள்ளார். இதற்கமைய கைது நடவடிக்கை, விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை நடத்துவது ஏனைய பொலிஸ் பிரிவு அல்லது நீதித் துறையினரால் மாத்திரம் முன்னெடுக் கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல