குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல
மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது.
Edit மெனு சென்று, GoTo செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், GoTo என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.
டேப் அளவினை மாற்ற
வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்க முயற்சிக்கையில், அதில் டேப் செட்டிங்ஸ் முதலில் மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். வேர்டில் மாறா நிலையில் அரை அங்குல அளவில் டேப் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் டேப் பட்டனைத் தட்டி, கர்சர் செல்லும் அளவினைக் கண்டு இதனை உணரலாம். ஆனால், இந்த செட்டிங் பல ஆண்டுகளாக வேர்டில் மாறா நிலையில் இருந்து வருகிறது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக, நீங்கள் இதனை மாற்ற வேண்டும் என எண்ணினால் அதற்கும் வழி உள்ளது. மாற்ற கீழ்க்காணும் வழிகளைக் கையாள வேண்டும்.
1. ஹோம் டேப்பில் முதலில் கிளிக் செய்திடவும். பாரா குரூப் டயலாக் லாஞ்சரில் அடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், பார்மட் மெனு சென்று டேப் தேர்ந்தெடுக்கவும்.
2. கீழாக இடது மூலையில் உள்ள டேப்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.
3. மாறா நிலையில் உள்ள டேப் அளவினை .50 லிருந்து .25க்கு மாற்றவும். இன்னும் பல அளவுகளை மாற்றுவதற்கு வழிகள் தரப்பட்டிருப்பதனை நீங்கள் காணலாம். விருப்பம் இருப்பின் அவற்றையும் மாற்றி, என்ன நிகழ்வுகள் ஏற்படுகின்றன எனப் பார்க்கலாம்.
4. அனைத்தும் மாற்றிய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், ஒவ்வொரு டேபின் அளவும் அரை அங்குலத்திற்குப் பதிலாக, கால் அங்குல அளவில் இருக்கும். இதனை இன்னும் சிறிதாகவோ அல்லது பெரியதாகவோ அமைக்கலாம்.
வேர்ட்: கமெண்ட் வண்ணம் மாற்ற
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர்ட் தொகுப்பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம்.
பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் பாய்ண்ட்டரை குறிப்பு உள்ளது என்று காட்டும் இடத்திற்குக் கொண்டு சென்றால், சிறிய பாப் அப் பாக்ஸ் காட்டப்பட்டு, அதனுடன் தொடர்புள்ள கமெண்ட் காட்டப்படும். பொதுவாக, இந்த கமெண்ட்டின் வண்ணம் இளம் மஞ்சளாக இருக்கும். இப்போது இந்த வண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால், வேர்டில் இதனை மாற்ற வழி தரப்படவில்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டம் செட்டிங்ஸில் அமைக்கப்படும் வண்ணத்தினை,வேர்ட் ஏற்றுக் கொள்கிறது. அதற்கான வழிகள்:
1. வேர்ட் தொகுப்பினை மினிமைஸ் செய்து கொள்ளவும். மற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறந்திருந்தாலும், அவற்றையும் சுருக்கவும்.
2. அடுத்து, டெஸ்க்டாப் திரையில் காலியாக உள்ள ஓர் இடத்தில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் Context Menu ஒன்றைக் காட்டும்.
3. இங்கு Properties தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், விண்டோஸ் Display Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4.இதில் Appearance என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
5.இங்கு Item கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, Tool Tip தேர்ந்தெடுக்கவும்.
6. இங்கு கீழ்விரி மெனுவில் வலது பக்கமாக உள்ள, Color indicator என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் ஒரு சிறிய கட்டத்தினைக் காட்டும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.
7. உங்களுக்கு எந்த வண்ணம் வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
8. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செட்டிங்ஸ் விண்டோஸ் எக்ஸ்பிக்காகத் தரப்பட்டுள்ளது. மற்ற தொகுப்புகளில் அவை காட்டும் வழிகளைப் பின்பற்றி செயல்படவும்.
ஹைலைட்டிங் கலர்
அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம்.
தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக