சனி, 8 டிசம்பர், 2012

செக்ஸ் உச்சப் பிரச்சினையால் 16 வருடம் அவதிப்பட்ட பெண் தற்கொலை

தொடர் செக்ஸ் உச்சப் பிரச்சினையால் கடந்த 16 வருடமாக அவதிப்பட்டு வந்த அமெரிக்கப் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரைப் பற்றிய செய்தி கட்டுரையாக ஒரு இதழில் வந்த அடுத்த நாளே அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

39 வயதான அவரது பெயர் கிரட்சன் மொலன்னன். புளோரிடாவின் ஸ்பிரிங் ஹில் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 16 வருடங்களாக தொடர் செக்ஸ் உச்ச பிரச்சினையால் கடும் அவஸ்தைப்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் தற்கொலை முடிவை எடுத்து விட்டார். செக்ஸ் உச்சப் பிரச்சினை காரணமாக இவரால் எந்த வேலையையும் பார்க்க முடியவில்லை. கடந்த வருடம் 2 முறை இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இவருக்கு இருந்து வந்த persistent genital arousal disorder (PGAD) என்ற செக்ஸ் உச்சப் பிரச்சினையால் இவருக்கு தொடர்ந்து பல முறை ஆர்கஸம் ஏற்படுமாம். அதாவது சில நேரங்களில் தொடர்ச்சியாக 50 முறை கூட ஆர்கஸம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் பெரும் தவிப்புடன் இருந்து வந்தார் மொலன்னன்.

மொலனன்னுக்கு இருந்த செக்ஸ் உச்சப் பிரச்சினையை உடல் ரீதியாகத்தான் சரி செய்ய முடியும் என்பதால் ஒன்று அந்த சமயத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் சுய இன்பத்திற்கு மாற வேண்டும் என்ற பெரும் சிக்கலான நிலை. இப்படிப்பட்ட நிலையுடன் கடந்த 16 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார் மொலன்னன்.

சில சமயங்களில் பல மணி நேரம் கூட தொடர்ந்து சுய இன்பத்தில் மூழ்கியிருப்பாராம் மொலனன்னன். இந்த நிலையில்தான் சனிக்கிழமை இரவு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல