சனி, 8 டிசம்பர், 2012

ஆசிட்' வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு செயற்கை கண்கள்

காதலிக்க மறுத்ததால், "ஆசிட்' வீச்சுக்கு ஆளான, பெண் பொறியாளரின் பார்வை பறிபோனது.காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருந்த இவர், இம்மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

அப்போது, இவருக்கும், இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், "ஆசிட்' வீசினார்.ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள், இரண்டு வாரங்களாக முயன்றும், வினோதினியின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை.இதுகுறித்து, இம்மருத்துவமனையின், தீக்காய சிகிச்சை நிபுணர் ஜெயராமன் கூறியதாவது:உயிருக்கு ஆபத்தான நிலையை, வினோதினி கடந்துவிட்டார். ஆனால், "ஆசிட்' வீச்சில், அவரது, இரு கண்களின் கரு விழிகளும் கருகியதுடன், பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டதால், வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது.

சில மாதங்கள் கழித்து, சேதமடைந்துள்ள அவரின் முகத்தை, "பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யவும், பெயரளவிற்கு செயற்கை கண்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு ஜெயராமன் கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல