இன்று உங்களின் வயது என்ன? அநேகமாக அனைவரும் சொல்லி விடலாம். உங்கள் வயதினை மாதத்தில் கூறுங்கள் என்றாலும், உடனே வயதை 12 ஆல் பெருக்கி, மிச்ச மாதத்தைக் கூட்டி சரியாகச் சொல்லலாம். நாள் கணக்கில் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வீர்கள்? கால்குலேட்டர் தான் வேண்டும். கால்குலேட்டரில், இரண்டு நாட்களிடையே உள்ள நாட்களின் எண்ணிக்கையை எப்படிப் பெறுவது? விண்டோஸ் கால்குலேட்டரில் இதனைப் பெறலாம்? அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் சிஸ்டத்திலேயே கால்குலேட்டர் ஒரு பில்ட் இன் அப்ளிகேஷனாகக் கிடைக்கிறது. இந்த விண்டோஸ் கால்குலேட்டரில் மற்ற சாதாரண கால்குலேட்டரிலிருந்து வேறுபடும் வகையில் Date Calculation என்ற கணக்கீடு உள்ளது. இந்த கணக்கீட்டினை நம்மில் பலர் பயன்படுத்துவதே இல்லை. அப்படியே பயன்படுத்தினால், மிகச் சிறிய அளவிலேயே இதனைப் பயன்படுத்துகிறோம். இது குறித்த விபரங்களை இங்கு காணலாம்.
இதனைத் தொடங்க, விண்டோஸ் கீயை அழுத்தி, calcul… என நீங்கள் டைப் செய்திடுகையிலேயே, அந்த சொல் முடிக்கப்பட்டு, கால்குலேட்டர் கிடைப்பதனைக் காணலாம். இது திறக்கப்பட்டவுடன், View கிளிக் செய்து Date Calculation என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+E கீகளை அழுத்தவும். இங்கு இரண்டு வகையான கணக்கீடுகளை மேற்கொள்ளலாம்.
1. இரண்டு நாட்களுக்கு இடையேயான காலத்தினைக் கண்டுபிடித்தல்.
2. ஒரு தேதியிலிருந்து குறிப்பிட்ட நாட்களைக் கழித்து அல்லது கூட்டிக் காணுதல்.
நாம் நாட்களுடன் கணக்கிடுவதால், கடந்த காலம், நிகழ்காலம் ஏன், எதிர்காலக் கணக்கினையும் மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் வயதினை ஆண்டு, மாதம் மற்றும் நாள் கணக்கில் காண விரும்புகிறீர்கள். இப்போது, From பீல்டில் Calendar பட்டனை அழுத்தவும். இதில் உங்கள் பிறந்த நாளினைத் தேர்ந்தெடுக்கவும். தொடக்கத்தில், அன்றைய நாள் காட்டப்படும். இதில் உங்கள் பிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பதும் எளிதுதான். மாதம், ஆண்டு நாள் ஆகியவற்றின் மீது கிளிக் செய்து அதனை அமைக்கலாம். அமைத்த பின்னர், இன்றைய நாள் உள்ளிட, To பீல்டில் Today என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இரண்டையும் அமைத்த பின்னர், Calculate என்பதில் கிளிக் செய்திடவும். உடன் கால வேறுபாடு, உங்கள் வயது, ஆண்டு, மாதம் மற்றும் நாள் கணக்கில் காட்டப்படும்.
இனி அடுத்த கணக்கினைக் காணலாம். நாள் ஒன்றிலிருந்து குறிப்பிட்ட எண்ணைக் கழிப்பது அல்லது கூட்டுவது என்பது சற்று சிரமம் தரும் கணக்காகும். இன்னும் கெடு முடிய 45 நாட்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு ஓர் அறிவிப்பு கிடைக்கிறது. அந்த 45 நாள் கொண்ட காலம் முடியும் தேதி என்ன என்று அறிய உடனே நாம் விரும்புவோம். இதனை நாமாகக் கணக்கிட்டால், 30 நாள்/31 நாள் கொண்ட மாதம், பிப்ரவரி எனில், லீப் ஆண்டா என்றெல்லாம் பார்த்து கணக்கிட வேண்டும்.
இதனை எளிதாக்க, விண்டோஸ் கால்குலேட்டர் மெனுவில் “Add or subtract days to a specified date” என்று ஓர் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் ஒரே ஒரு தேதி தர வேண்டும். அதனுடன், குறிப்பிட்ட நாட்களை கூட்டிப் பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டபடி, தேதியை முதலில் செட் செய்திடவும். அடுத்து நாட்களைக் கூட்டிப் பார்க்கவா அல்லது கழித்துப் பார்க்கவா என்பதைக் காட்ட வேண்டும். (add/subtract). இங்கு நீங்கள் எத்தனைநாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என்பதனையும் குறிப்பிடலாம். இவை அனைத்தையும் செட் செய்த பின்னர், Calculate என்பதில் அழுத்த நமக்கான விடை, தேதி மற்றும் நாள் குறிப்பிட்டுக் கிடைக்கும்.
ஒரு சின்ன குறிப்பு: இந்த கால்குலேட்டர் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் மட்டுமே செயல்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக