சனி, 8 டிசம்பர், 2012

“Pen Flicks" என்றால் என்ன? இது எதற்கு? எப்படி இன்ஸ்டால் செய்வது?

விண்டோஸ் 8 டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் சின்ன சின்ன அம்புக்குறி கீகளைத் தேடி அழுத்துவதற்குப் பதிலாக, திரையில் விரல்களால் தேய்த்து பல செயல்களை மேற்கொள்ள முடிகிறதே. இது போல செயல்பாடுகளை மேற்கொள்ளவே “Pen Flicks" நமக்கு உதவுகிறது.

முதலில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, கண்ட்ரோல் பேனல் பெறவும்.

இதில் ‘Classic’ வியூ தேர்ந்தெடுக்கவும். பின்னர், Pen and Input Devices என்பதனைக் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் விண்டோவில் Flicks என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Use flicks to perform common actions quickly and easily என்று உள்ள இடத்தில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

இப்போது உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் உண்டு. the navigation flicks மற்றும் the navigational flicks with editing.

நான் இரண்டாவதையே மேற்கொள்ளுமாறு கூறுவேன். ஏனென்றால், இதன் மூலம் கொப்பி அண்ட் பேஸ்ட் மிக எளிதாக மேற்கொள்ளலாம். இருப்பினும் உங்களுக்கு எது மிகவும் விருப்பமோ அதனையே தேர்ந்தெடுக்கவும்.

இதிலேயே அதே விண்டோவில், இன்னும் சில நுணுக்கமான தொடுதல் வேலைகளுக்கான ஆப்ஷன் கிடைக்கும். அறிந்து தேர்ந்தெடுக்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல