மசக்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கேட் வியாழனன்று வீடு திரும்பினார்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் மசக்கைக்காக இந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் கிங் எட்வர்ட் செவென் மருத்துவமனையில் வேலைபார்த்துவந்த பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ராஜ குடும்பத்தார் பேசுவதுபோல நடித்து ஆஸ்திரேலிய வானொலி நிலையத்திலிருந்து பொய்யாக வந்த தொலைபேசி அழைப்பை முதலில் எடுத்து அதனை கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின் தங்கியிருந்த அறைக்கு கொடுத்திருந்த நர்ஸ் இவர்தான் என்பதை மருத்துவமனை உறுதிசெய்துள்ளது.
பின்னர் அந்த அறையில் இருந்த வேறொரு நர்ஸ், கேதரினுடைய உடல் நலம் பற்றி தந்த தகவல்கள் வானொலியில் பின்னர் ஒலிபரப்பப்பட்டிருந்தன.
செவிலியர் ஜசிந்தா சல்தானாவின் மறைவுக்கு மருத்துவமனை தலைமை நிர்வாகி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியமும் மனைவி கேத்தரினும் ஜசிந்தாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
காரணம் தெரியாத மரணம் என்ற நிலையில் வைத்து இவரது மரணத்தை பொலிசார் விசாரித்துவருகின்றனர்.
பிபிஸி தமிழோசை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக