ஊடகர் ஜெயராஜ் துரோகி, தமிழின விரோதி, சிங்கள அரசின் எடுபிடி.......?
கனடாவில் இருந்து வெளிவருகின்ற உலகத் தமிழர் பத்திரிகையில் ஊடகவியலாளர் டி. பி. எஸ். ஜெயராஜ் ஒரு துரோகி, தமிழின விரோதி, சிங்கள அரசின் எடுபிடி என்று சித்திரிக்கப்பட்டு உள்ளார்.
இவரை காரசாரமாக தாக்கி கட்டுரை ஒன்று இப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.
இக்கட்டுரையை நம் வாசகர்களுக்காக தமிழில் தருகின்றோம்.
“ கனடாவுக்கு ஏதிலியாக புகலிடம் தேடி வந்தவர் டி. பி. எஸ். ஜெயராஜ். எண்பதுகளின் நடுப் பகுதியில் உலகத் தமிழர் பத்திரிகைக் காரியாலயத்தில் தஞ்சம் அடைந்தார். வேலையற்று இருந்த இவருக்கு உலகத் தமிழர் பத்திரிகையில் சில பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இவர் உண்மையில் நம்பத் தகாதவர். சொந்தக் குணத்தை காட்டத் தொடங்கி விட்டார்.
கொழும்பில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் வெளிவருகின்ற சில ஆங்கில ஊடகங்களுக்கு உலகத் தமிழர் பத்திரிகையில் இருந்து கொண்டே தமிழ் மக்களுக்கு எதிரான கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தார். அலுவலகத்தில் தொலைபேசி வசதிகள் இருந்தன. இருந்தும் வெளியே சென்றுதான் தொலைபேசியில் கதைப்பார். எல்லோரும் தூங்கச் செல்கின்றமைக்கு முன்பே தூங்கச் சென்று விடுவார். ஆனால் நடுநிசியில் எழுந்து எழுதுவார். இவரது இந்நடவடிக்கைகள் சக ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
ஒருநாள் அதிகாலை இரண்டு மணி அளவில் அவரது அறைக்குள் திடீரென புக நேர்ந்தது. அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுதிக் கொண்டிருந்த கட்டுரை ஒன்று அப்போது மாட்டுப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து அவர் உலகத் தமிழர் பத்திரிகையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இலங்கையின் மறைமுக தூதுவராக கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுகின்றமைக்கு முன்பில் இருந்தே கே. பியுடன் உறவை பேணி வந்திருக்கின்றார். தாய்லாந்தில் வசித்து வந்த கே. ரி. இராஜசிங்கம் போன்ற தமிழர்களைப் போன்றே ஜெயராஜும் இயன்ற அளவில் ஈழத் தமிழருக்கு எதிராகவும், சிங்களத்துக்கு ஆதரவாகவும் பிரசாரத்தைச் செய்து வருகிறார். இவர்களைப் போன்ற பல எட்டப்பர்களைப் பாவித்தே புலம்பெயர் ஈழத் தமிழர் மத்தியில் பொய்ப் பிரசாரங்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாசகார வேலைகளையும் சிங்களம் செய்து வருகின்றது.
கே.பியை முன்னிலைப்படுத்தி பல உலக ஊடகங்கள் பேட்டி எடுக்க ஜெயராஜே காரணமாக இருந்தார். சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துகின்ற இவரைப் போன்ற எட்டப்பர்கள் கூறுகின்ற பொய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டுரைகளை நாம் எழுதுகின்றமை தேவையற்ற ஒன்று. ஆனால் இவர்களின் பொய்களை வெளிக்கொண்டு வருகின்ற வகையில் சில பதிவுகளை மேற்கொள்ள வேண்டித்தான் உள்ளது.
இப்பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவூட்ட முடியும். அதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இது போன்ற கட்டுரைகளைப் படித்தாவது கே. பி, ஜெயராஜ், இராஜசிங்கம் போன்ற எட்டப்பர்கள் திருந்துவார்களா? என்பது முக்கியம் அல்ல. இவற்றை வாசிக்கின்ற மக்கள் சிந்தித்துச் செயலாற்றுவார்கள் என்று எண்ணுகிறோம். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுக்கின்றமை மூலம்மக்களை மேலும் முட்டாள்கள் ஆக்குகின்ற முயற்சிகளைச் செய்கின்றமை பத்திரிகை தர்மம் அல்ல என்பதை சிங்கள அரசின் எடுபிடிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஈழப் போராளிகளின் போராட்டத்தின் பின்னர் அவர்களைக் குறை சொல்லியே ஏதிலி அந்தஸ்தைப் பெற்ற ஜெயராஜ் போன்றவர்கள் உண்மைக்குப் புறம்பாகச் செயற்படுகின்றமை சிறப்பான அம்சம் அல்ல. மானிட தர்மத்துக்கே செய்கின்ற துரோகம். ”



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக