செவ்வாய், 4 டிசம்பர், 2012

காணமல் போன எதிர்கட்சித்தலைவர்... 19 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக கண்டெடுப்பு

லிபியா நாட்டில் கடாபி ஆட்சிக் காலத்தில் காணாமல் போன எதிர்கட்சித்தலைவரின் உடல் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லிபியாவில் கடாபி ஆட்சி காலத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் மன்சௌர் அல்-கிகியா. இவர் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியவர். திடீரென்று 19 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் அவர் காணமல் போனார். கடாபிக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக வதந்தி பரவியது.

ஆனால் அல்-கிகியாவை கடாபியின் தொண்டர்கள்தான் கடத்திக் கொலை செய்து, அவரது உடலை சவக்கிடங்கில் மறைத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடுத்து கடாபி ஆட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் புரட்சிக்காரர்களால் பிடிக்கப்பட்டு நடுரோட்டில் கொல்லப்பட்டார் கடாபி. அவரின் மரணத்திற்குப் பின்னர் லிபியாவில் நடைபெற்ற விசாரணையில், அல்-கிகியாவின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.

19 ஆண்டுகள் கடந்த நிலையில், அல்-கிகியாவின் உடல் பிரேதபரிசோனை செய்யப்பட்டது. அதில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல