செவ்வாய், 4 டிசம்பர், 2012

ரூபாய் நோட்டை எடுத்து 'துடைத்த' இங்கிலாந்து கால்பந்து வீரர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் டாய்லெட் போய் விட்டு டிஷூ பேப்பருக்குப் பதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்துக் கொண்டார். இந்தப் படத்தை அவர் வெளியிட இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

அந்த கால்பந்து வீரரின் பெயர் லியாம் ரிட்ஜ்வெல். 28 வயதான இவர் வெஸ்ட் ப்ரோமியான் அல்பியான் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணியின் கால்பந்து வீரர் ஆவார். தடுப்பாட்டக்காரரான இவர் ஒரு சீரியஸான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிர்மிங்காமில் உள்ள தனது வீட்டில் டாய்லெட் போன பின்னர் டிஷூ பேப்பரை எடுத்துத் துடைப்பதற்குப் பதில், 20 பவுண்டு ரூபாய் நோட்டை எடுத்து துடைத்துள்ளார். அதை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார். இதுதான் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது.

அதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்த நிலையில் போஸ் கொடுத்துள்ளா லியாம். டிரவுசரைக் கழற்றிய நிலையில் பாதி எழுந்த நிலையில் காணப்படுகிறார் லியாம். அவரைச் சுற்றிலும் ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடக்கின்றன. அத்தனையும் துடைப்பதற்காக அவர் வைத்துள்ளார் என்று தெரிகிறது. இது அவரது ரசிகர்களிடயே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீரர் வாரம் 20 ஆயிரம் பவுண்டு வருமானம் ஈட்டக் கூடிய முன்னணி வீரர் ஆவார். இவரது வீட்டின் மதிப்பு 10.5 லட்சம் பவுண்டு மதிப்பிலானதாகும்.

தனது ஆய் படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் லியாம். ஆனால் ரசிகர்களோ லியோம் ஒரு மிகப் பெரிய முட்டாள் என்று விமர்சித்து வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல