வியாழன், 21 மார்ச், 2013

ரீசைக்கிள் பின்

உங்களை அறியாமல், டெஸ்க் டாப்பில் இருந்த ரீசைக்கிள் பின் ஐகானை பைல்களை காலி செய்திடும் முயற்சியில் அழித்துவிட்டால் அதனை மீண்டும் பெற நான் கீழே தரும் குறிப்புகள், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றிற்கு பொருந்தும்.

டெஸ்க்டாப் சென்று காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், PERSONALIZE என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது personalization திரை காட்டப்படும். இந்த திரை தரும் வசதிகளைப் பயன்படுத்தி, வால் பேப்பர் ஆகியவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம்.  இதன் இடது மேல்புற மூலையில் CHANGE DESKTOP ICONS என்பதனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்திடவும்.

இது change desktop icons என்ற திரையைத் திறக்கும். இங்கு அடிப்படை இயக்கம் தரும் டெஸ்க்டாப் ஐகான்களைக் காணலாம்.

ஒவ்வொரு ஐகான் அருகேயும் சிறிய செக் பாக்ஸ் இருக்கும். இங்கு RECYCLE BIN என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும்.
பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். உடன் டெஸ்க் டாப் ஐகான் திரையில் இருப்பதைக் காணலாம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல