வியாழன், 21 மார்ச், 2013

ஈழபுலிகள் ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதன் எதிரொலி தான் எங்களுக்கு வேதனை : மீனவர்கள் பாய்ச்சல்!

நாகை, நம்பியார் நகரைச் சேர்ந்த கன்னையன், 45, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நேற்று முன்தினம் மதியம், ஆறு மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், கோடியக்கரை கடல் பகுதியில், தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டுஇருந்தனர். விசைப்படகில் வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூவர், இவர்களது படகில் இறங்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர். சிறுவர்களாக இருவர் இருந்ததால், அவர்களை வெட்டாமல் விட்டு சென்றனர்.

படுகாயமடைந்தவர்களை, அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மூவர், மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர், நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:

இந்திய கடல் எல்லைக்குள், இலங்கை கடற்படையினர் வந்து தாக்கியதற்கு, சமீபகாலமாக, தமிழகம் வரும் புத்த பிட்சுகள் மற்றும் சிங்களர்களை, இங்குள்ள ஈழபுலிகள் ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதன் எதிரொலி தான். இங்குள்ளவர்கள் அரசியல் நடத்துவதற்காக நடத்தும் நாடகத்தில், பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் தான்.இவ்வாறு கடும் வேதனையுடன் மீனவர்கள் கூறினர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல