வியாழன், 21 மார்ச், 2013

தெரிந்து கொள்ளுங்கள்

எம்.பி.3 பாடல்களில், பாடகர் ஒலியை மட்டும் நீக்கி, பாட்டைப்பதிய சாப்ட்வேர்

இணையத்தில் சில பாடல்கள், கராகோ வகை என்று தரப்படுகிறது. ஒரு சில ஆர்வப் பிரியர்கள், பாடல்களில் பாடகரின் ஒலியை நீக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இவற்றை டவுண்லோட் செய்து, நீங்கள் உங்கள் இனிமையான குரலைப் பதிவு செய்து ரசிக்கலாம். நீங்களாக முயற்சிக்க, AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.

விண்டோஸ் தீம் எதனைக் குறிக்கிறது

தீம் என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.


புளூடூத் பெயர் வரக் காரணம்

900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

countrycodes

http://www.simplecountrycodes.com அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது. இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்பதனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும். பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப்பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப்பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.

டி.எப்.டி. (Thin Film Transistor):

கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் லட்சக்கணக்கான வண்ணக் கலவை காட்டப்படும்.

அனலாக் (Analogue):

எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக்கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.

ரெசல்யூசன்: (Resolution)

மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.

வேர்டில் தேடல்:

மைக்ரோசாப்ட் வேர்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பைல் ஒன்றைத் திறக்க எண்ணுகிறீர்கள். ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. உடனே வேர்ட் தொகுப்பை மினிமைஸ் செய்துவிட்டு, எக்ஸ்புளோரர் சென்று அல்லது ஸ்டார்ட் மெனு சென்று தேடல் கட்டத்தில், பைலின் பெயரை அல்லது டெக்ஸ்ட்டில் ஒரு சொல்லை டைப் செய்து தேட முயற்சிப்பீர்கள். இது தேவையில்லை. வேர்ட் தொகுப்புக்குள்ளா கவே பைல் தேடும் வேலையை மேற் கொள்ளலாம்.
வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் File மெனு செல்லவும். அதில் விரியும் பட்டியலில் Open என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல பைல்களுடன் ஒரு பெட்டி தோன்றுகிறதா! இதன் வலது மேல் மூலைக்குச் செல்லவும். இங்கு Tools என்று இருக்கும் இடத்தில் உள்ள கீழாக உள்ள அம்புக் குறியில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதன் மேலாக Search என்று காட்டப்படுவதைப் பார்க்கலாம். அதில் கிளிக் செய்தால், தேடல் கட்டம் திறக்கப்படும். இங்கு நீங்கள் தேட வேண்டிய பைல் குறித்து டெக்ஸ்ட் அமைத்து தேடலாம்.

வேகத் தேடல் ஷார்ட் கட்:

விண்டோஸ் (Windows) கீயை அழுத்திக் கொண்டு F கீயை அழுத்தவும். உடன் பைல் தேடும் கட்டம் கிடைக்கும்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர் பெற:

விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு E கீயை அழுத்தவும்.

எக்ஸ்பியில் தேட இன்னொரு வழி:

உங்களுக்குத் தெரியுமா! எதனையாவது தேட வேண்டும் என்றால், ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்தால், மெனு ஒன்று எழுந்து வரும். அதில் Search என்ற தேடல் கட்டம் தர, பிரிவு ஒன்று இருக்கும். அங்கு கிளிக் செய்து தேடலாம்.

இணைச் சொல் பெற:

வேர்டில் டைப் செய்து கொண்டிருக்கையில், சொல் ஒன்றுக்கான இணையான பொருள் தரும் சொல் (synonym) தேவையா? வேர்ட் தொகுப்பை மூடி, இணையம் எல்லாம் செல்ல வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த சொல்லுக்கு இணையான பொருள் தரும் சொல் தேடுகிறீர்களோ, அந்த சொல்லைத் தேர்ந் தெடுக்கவும். பின்னர் ஷிப்ட் + எப் 7 (Shift +F7) அழுத்தவும். எழுந்து வரும் மெனுவில் synonym என்று இருக்கும். அதில் லெப்ட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் உள்ள சொற்களைப் பார்த்து எது உங்கள் தேடலுக்குச் சரியாக இருக்கும் எனக் காணவும். அருகே உள்ள படத்தில் word என்ற சொல்லுக்கான இணைச் சொல் தேடுகையில் கிடைக்கும் சொற்கள் அடங்கிய மெனுவினைக் காண்கிறீர்கள். இந்த தேடலில் இன்னொரு வழியும் உண்டு. வேர்ட் டாகுமெண்ட்டில் எந்த சொல்லுக்கு இணைப் பொருள் தரும் சொல் வேண்டுமோ, அதனை ரைட் கிளிக் செய்து, மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம். அதில் synonym என்ற பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தாலும் மேலே சொன்ன கட்டம் கிடைக்கும். அல்லது சொல்லை ஹைலைட் செய்துவிட்டு F7 கீயை அழுத்தவும்.

50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு?

ஒருவர் இடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ். ஆயிரம் கிகா பைட் அளவு கொண்டது ஒரு டெரா பைட். இது உலக அதிசயங்களில் ஒன்றான நியூயார்க் எம்பயர் கட்டடத்தின் உயரத்தினைப் போல 16 மடங்கு கூடுதலாக டாகுமெண்ட்களை அடுக்கி வைப்பதற்குச் சமம்.

-------------------------------------------------------------
திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

போல்டர் விரிந்து கொடுக்க:

பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்பு ளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே. இதற்கு விண்டோஸ் எக்ஸ் புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நியூமெரிக் கீ பேடில் உள்ள ஆஸ்டெரிஸ்க் கீயினை (*) அழுத்தவும். அவ்வளவுதான். போல்டர்கள் மற்றும் துணை போல்டர்கள் அனைத்தும் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்கள் ட்ரைவில் அதிக போல்டர்கள் இருந்தால், இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். சற்றுப் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல