ஸ்டாலின் வீட்டு ரெயிடுக்கு காரணம், மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வாங்கிய கார் என்பத தற்போது உறுதியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வாங்கிய கார் ஹம்மர் HUMMER H3 SUV வகையாகும். அவர் என்றோ வாங்கிய இந்தக் காரை வைத்து இன்று அரசியல் சதுரங்கத்தை நடத்தியுள்ளது காங்கிரஸ்.
என்றோ வாங்கினார் என்று எப்படி அடித்துச் சொல்கிறோம் என்றால், HUMMER H3 SUV தயாரிப்பே, 3 வருடங்களுக்குமுன், கடந்த 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது!
அமெரிக்காவின் ஜி.எம். கார் நிறுவன தயாரிப்பு ஹம்மர் காரை உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்தார் என்றதும், ஊடகங்கள் எல்லாம், “அதி சொகுசுக் கார், ஆஹா ஓஹோ கார்” என்றெல்லாம் தூக்கி நிறுத்துகின்றன. உலகப் பணக்காரர்கள் எல்லாம் ஹம்மர் காரில் வலம்வருவது போல ஒரு தோற்றமும் உருவாக்கப்பட்டு உள்ளது.
அப்படி ஒன்றும் கிடையாது. இது ஒன்றும் Rolls-Royce போன்ற ப்ரஸ்டீஜ் கார் அல்ல. 2010-ம் ஆண்டு வெளியான கடைசி மாடல் ரீடெயில் விற்பனை விலையே, $41,705 மட்டுமே!
Chevrolet Colorado போன்ற ஒரு ஃபாமிலி கார்தான் இது. இறக்குமதி செய்து இந்தியாவுக்கு வந்து சேரும்போது ‘கண்ணை மயக்கும்’ வரிவிதிப்புடன் கோடிகளில் விலை உயரும். அவ்வளவுதான்.
இதன் விலை வரியுடன் சேர்த்து, இந்தியாவில் சுமார் ரூ. 20 கோடி என்கிறார்கள்.
உதயநிதியின் அப்பா ஸ்டாலின் வைத்திருப்பது, ரேஞ்ச் ரோவர் கார். டாடா கூட்டுத் தயாரிப்பதில் இந்தியாவில் தயாராவதால், விலை சுமார் 1 கோடி மட்டுமே. இது HUMMER H3 காரைவிட சிறந்தது. HUMMER H3 புரொடக்ஷன் நிறுத்தப்பட்டதே அமெரிக்க விற்பனை டல் அடித்துதான்! (2005-ல் 33,000 கார்கள் விற்றன. 2009-ல் வெறும் 7,500 கார்களே விற்பனையாகின)
உதயநிதி ஸ்டாலின் இந்தக் காரை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. ஜி.எம்., அமெரிக்க நிறுவனம் என்றாலும், ஆஸ்திரேலியாவில் விற்பனையான கார்கள் (2007ல் இருந்து 2009 வரை விற்பனையானது) தென்னாபிரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. GM Holden டிஸ்ட்ரிபியூஷன், Saab brand கார்களின் டீலர்கள் ஊடாக விற்பனை செய்தது.
அப்படியொரு ரொம்ப நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஒரு கார்தான், இப்போது வில்லங்கமாகி உள்ளது.
என்ன இருந்தாலும் சி.பி.ஐ. கில்லாடிகள்தான். எப்போதோ தயாரிக்கப்பட்டு, எப்போதோ இறக்குமதி செய்யப்பட்ட காரில் முறைகேடு இருப்பதாக, இப்போது கண்டு பிடித்திருக்கிறார்களே… கை கொடுங்க பாஸ்!
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக