வியாழன், 21 மார்ச், 2013

வேர்ட் டாகுமெண்ட் உருவான நாள்

வேர்டில் பல டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். சில வேளைகளில் எந்த நாளில் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தோம் என்று தெரிய வேண்டியதிருக்கும். உருவாக்கிய பின் பலமுறை அதனைப் படித்திருப்போம்.

பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்போம். இருப்பினும் உருவாக் கிய முதல் நாளைத் தெரிந்து கொண்டால் அதன் அடிப்படையில் பல மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்போம். எங்கு இந்த தேதி கிடைக்கும்?

வேர்டில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் Insert மெனு கிளிக் செய்து அதில் Field என்பதைத் தேர்ந்தெடுங்கள். இப்போது Field டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இதில் Field Names என்று ஒரு பெட்டி இருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லுங்கள். அங்கு Create a Date என்று ஒரு பீல்டு காட்டப்படும். இதனைத் தேர்வு செய்தால் உடன் எந்த பார்மட்டில் தேதி காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்திட பல பார்மட்கள் வரிசையாகக் காட்டப்படும்.

இதில் கிழமையுடன் கூடிய தேதி பார்மட்டும் இருக்கும். நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், அந்த டாகுமெண்ட் உருவாக்கப்பட்ட முதல் நாள், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் சேர்க்கப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல