புதன், 30 செப்டம்பர், 2015

வெளிநாடுகளில் காதல் எனும் போர்வையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆசாமி

மேற்படி கூறப்பட்ட நபரின் பெயர் ராசரத்தினம் ரமேஷ். வயது 36. அடையாள அட்டை இலக்கம், 790556550V. கடவுச்சீட்டு எண், N5479450. இவர் ஜா-எலவை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்டவர்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கீழ்த் தாடை வலியும் மாரடைப்பின் அடையாளமே!

மாரடைப்பை சரிசெய்யும் அதிநவீன சிகிச்சைகள்!

“1,70,000,00! அதாவது, ஒரு கோடியே எழுபது லட்சம்! இது என்ன கணக்கு என்கிறீர்களா? ஆண் டொன்றுக்கு உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை. இதுபோலவே இன்னும் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் ஆண்டுதோறும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.

கர்ப்­பப்பை வாசல் புற்­று­நோயை தடுப்­பது எப்படி?

கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் என்றால் என்ன?

பெண்­களின் கர்ப்­பப்பை வாசல் பகு­தி­யான சேர்விக்ஸிலி­ருந்து உரு­வாகும் புற்­றுநோய் கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் எனப்­ப­டு­கின்­றது. இவை கூடு­த­லாக 30 இலி­ருந்து 40 வய­து­டைய பெண்­களில் ஏற்­ப­டு­கின்­றது. சில வேளை­களில் வயது கூடிய பெண்­க­ளிலும் ஏற்­ப­டு­கின்­றது. ஆனால் 25 வய­திற்கு குறை­வான பெண்­களில் இது மிக மிக அரி­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ் உயி­ரி­ழந்­தது எப்­போது..?

இந்­தி­யாவில் எழுந்­துள்ள புதிய சர்ச்சை!

இந்­திய சுதந்­திரப் போராட்ட வர­லாற்றில் நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போ­ஸுக்கு தனி இடம் உண்டு. ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து இந்­தியா விடு­தலை பெற­வேண்டும். அதற்கு ஒரே வழி போர்! அதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நம்­பி­யவர் நேதாஜி. அந்தத் தீவி­ர­மான நம்­பிக்­கையின் விளை­வுதான் அதி­ர­டி­யாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்­தது; துப்­பாக்கி ஏந்த வைத்­தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்­பா­னுடன் இணைந்து நேதா­ஜியின் இந்­திய தேசிய இரா­ணு­வப்­படை பிரிட்­ட­னுக்கு எதி­ராகப் போரிட்­டது.

மது­பாவனை ஏற்­ப­டுத்தும் உடல் நலப் பிரச்­சி­னைகள்

உச்­சந்­தலை முதல், உள்­ளங்கால் வரை உள்ள அனைத்து தொகு­தி­க­ளிலும், அதன் உறுப்­பு­க­ளிலும் நாட்­பட்ட பாதிப்­பு­களை மது­பா­வனை ஏற்­ப­டுத்­து­கி­றது. குறிப்­பாக உள்­ளெ­டுக்­கப்­ப­டு­கின்ற வாய்க்­குழி, அகத்­து­றிஞ்சல் நடை­பெ­று­கின்ற இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், உட்­பட்ட சமி­பாட்டு தொகு­தியில் உள்ள முக்­கிய சுரப்­பி­க­ளான ஈரல், சதையி என்­ப­வற்றில் இதன் பாதிப்­புக்கள் மிக அதிகம்.

ஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே நரேந்திர மோடியும்!

அடால்ஃப் ஹிட்லரை ஞாபகப்படுத்தக் கூடியவை ‘ ஃபோக்ஸ் வேகன்’ கார்கள்.volkswagen -hitler ஜெர்மனில் ‘ஃபோக்ஸ்வேகன்’ என்றால், மக்களுடைய வாகனம் என்று அர்த்தம்.

முதலிரவுக்கும் கடைசி இரவுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன? (video)


சனி, 26 செப்டம்பர், 2015

சோ ராமசாமி காலமானதாக டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

சோ.ராமசாமி இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார் நடிகை குஷ்பு. வலைத்தளவாசிகளின் எதிர்ப்பினை அடுத்து ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுள்ளார் குஷ்பு.

ஆசிரியையையான புதுமணப் பெண்ணை விதவையாக்கினர் யாழ்ப்பாண ரவுடிகள்!! புகைப்படங்கள்

சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணமான பெண் ஒருவர் யாழ்ப்பாண ரவுடிகளின் தாக்குதலில் கணவனை இழந்து அநியாயமாக விதவை ஆகி உள்ளார்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

19 வருடங்களாக சில்க் ஸ்மிதாவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் கரூர் ரசிகர்கள்!

 படம்: கூகிள்

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான சில்க் ஸ்மிதாவின் மறைவை அடுத்து அவருக்கு கிட்டதட்ட 19 வருடங்களாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

ஜிமெயிலில் ஆவணக் காப்பகம்

மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணுவோரும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.

எக்ஸெல் டிப்ஸ்... பைல்களை ஒழுங்கு படுத்த, பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி

எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:

வேர்ட் டிப்ஸ்! நீளவரியை மடக்கி அமைக்க, வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்

நீளவரியை மடக்கி அமைக்க:

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண் 8 சறுக்கல்கள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின்னர், தன் தொடு உணர் திரை தொழில் நுட்பத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கமும் வெகு சிறப்பாக இருந்தது. புதிய வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம், டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் கிடைத்து பலர் மகிழ்ச்சியுடன் மாறிக் கொண்டனர்.

வேர்ட் டிப்ஸ்! வேர்டில் எப்2 கீ:

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள்.

வேர்ட் டிப்ஸ்! ஸ்கிரீன் டிப்:

வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன.

வேர்ட் டிப்ஸ்! வேர்டில் எக்ஸெல் ஒர்க்ஷீட் சார்ட் பதித்திட:

பொதுவாகவே, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள சார்ட் ஒன்றை அப்படியே பதித்திடலாம். இதனைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.

இசைப் பாடல்களை இலவசமாகப் பதிய

பாடல்களை, எம்பி3 வடிவிலோ அல்லது வீடியோ பைல்களாகவோ தேர்ந்தெடுத்துப் பதிவது தற்போது அனைவரும் மேற்கொள்ளும் பழக்கமாக உள்ளது. பல இணைய நிறுவனங்கள், இந்தப் பாடல் கோப்புகளைப் பதிந்து வைத்திட, இலவசமாகவும், கட்டணம் பெற்றுக் கொண்டும், தங்கள் சர்வர்களில் இடம் தந்து வருகின்றன. இதன் மூலம், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இவ்வாறு சேமித்து வைத்த பாடல் கோப்புகளைப் பெற்று இயக்க முடியும். அத்தகைய தளங்களையும், அவற்றின் இலவச மற்றும் கட்டண திட்டங்கள் சிலவற்றையும் இங்கு காணலாம்.

ஆண்ட்ராய்ட் சிஸ்ட ஸ்மார்ட் போனில் பதிந்திருந்த இணைய தள முகவரிகளை அழிக்க

இணையத்தில் தள முகவரிகள் மட்டுமின்றி, நாம் பார்த்த யு ட்யூப் படங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் தேடியவை, புத்தகங்கள் போன்ற அனைத்து தேடல்களும் பதியப்படுகின்றன. ஸ்மார்ட் போனில், இலவசமாக எந்த அப்ளிகேஷனையோ அல்லது ஒரு பொருளையோ பெற்றாலும், அது தளம் சார்ந்து பதியப்படுகிறது.

தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும்.

எக்ஸெல் டிப்ஸ்... ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்

ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்: பலர், இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து, ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் பணிகளைத் தொடர விரும்புவார்கள். அல்லது ஒரே ஒர்க் ஷீட்டின் இரு நகல்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் தேவை ஏற்படலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... நெட்டுவரிசைகளைப் பிரித்தல்

நெட்டுவரிசைகளைப் பிரித்தல்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்?

எக்ஸெல் டிப்ஸ்... வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்

வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்: செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் மெனு தேடி அவற்றை அமைக்காமல், ஷார்ட் கட் கீகள் மூலம் அமைப்பது எளிமையான ஒன்றாகும். இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும். இதற்கென, எக்ஸெல் சில ஷார்ட்கட் கீ வசதிகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த

நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.

வேர்ட் டிப்ஸ்! டேபிள் ஒன்றை வரைய

டேபிள் ஒன்றை வரையலாம்: வழக்கமாக வேர்ட் புரோகிராமில், ரிப்பனில் கிடைக்கும் insert டூலைப் பயன்படுத்தி, நாம் டேபிள் ஒன்றை டாகுமெண்ட்டில் இணைப்போம். இதற்குப் பதிலாக, டேபிள் ஒன்றை நாம் வரையும் வகையில், வேர்ட் draw~-a~-table என்ற டூலைத் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியும் நாம் டேபிள் ஒன்றை உருவாக்கலாம்; அதாவது வரையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

ப்ளீஸ், யாராவது என் நாயை சுடுங்களேன், துப்பாகி தருகிறேன்: ஃபேஸ்புக்கில் பெண் அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொலை செய்யுமாறு மக்களுக்கு ஃபேஸ்புக் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன? திடீர்த் திருப்பமாக மன்னார் குரு முதல்வர் வெளியிட்ட தகவல் இது

மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்குச் சென்று தேனீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

முகத்தில் வரும் சீழ் நிறைந்த முகப்பருக்களை போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு, பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்துளைகளை இறுக்கிவிடும். அத்தகைய பேக்கிங் சோடாவில் நீர் மற்றும் சிறிது வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் சீழ் நிறைந்த பருக்கள் நீங்கிவிடும்.

முகத்தில் பரு அதிகம் இருக்கா? அப்ப விஸ்கி ஃபேஸ் பேக் போடுங்க...

பரு முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதனைப் போக்க பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களைப் போக்கும் பொருட்கள் உள்ளது.

வியாழன், 17 செப்டம்பர், 2015

உங்க பல் மஞ்சளா இருக்கா? இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து, அதில் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும். இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், நல்ல பலனை உடனடியாகக் காணலாம்.

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!

வழக்கமாகவே நாம் உணவு உண்ட பின் அஜீரணத்தை விரட்டும் பொருட்டு, நாம் பெருஞ்சீரகத்தை மெல்லுகிறோம். ஆனால் அவை சிறந்த வாய் புத்துணர்வூட்டிகள் என்பது நாம் அறியாத ஒன்று. அவை நமது உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும்.மேலும் துர் சுவாசத்தை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிடும். ஏப்பம் வருவது மற்றும் ரீஃப்லெக்ஸ் அமிலம் உருவாவதை குறைக்கிறது. நமது சுவாசத்திற்கு இயற்கையாகவே இனிமையூட்ட சில பெருஞ்சீரகத்தை மென்று துர்நாற்றத்தை விரட்டலாம்.

முகத்தில் உள்ள கருமையான தழும்புகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள்!!!

எலுமிச்சை: எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் நிறைந்துள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையைப் பின்பற்றிய பின், 24 மணிநேரத்திற்கு வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.

90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில்சொல்வதாக அமையக்கூடும்.

புஸ்வாணம்!

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும்,அதில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

புதன், 16 செப்டம்பர், 2015

“ஐ.எஸ் தீவிரவாதியாக மாற வேண்டும்”- பெற்ற தாயை கொடூரமாக கொன்று ஒத்திகை பார்த்த மகள்


ஐ.எஸ் தீவிரவாதி போல மாற விரும்பிய 15 வயது சிறுமி ஒருவர் பிணையக்கைதியை கொல்வது போல் தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர்.

என் மகளோடு சேர்த்து என்னையும் தகனம் செய்யுங்கள்: டெல்லி பெண்ணின் கடைசி ஆசை

                                                    Vidhi with husband Pradeep Chadha

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு டெல்லியில் உள்ள ரஜௌரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் சதா. அவரின் மனைவி விதி. அவருக்கு பிரசவம் நடக்கையில் ஏற்பட்ட சிக்கலால் அவர்களின் மகள் குர்னீர் உடல்நலக்குறைவோடு பிறந்தார். லட்சக் கணக்கில் செலவு செய்தும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 4

கருணா தன் குடும்பம் வாழும் வெளிநாட்டில் அவர்களுடன் இணைந்தாலும் நிம்மதியாக காலத்தை செலவிட புலத்து புலி பினாமிகள் விடாது. ஏதாவது குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பர். டக்ளசின் நிலை அதை விட மோசம். எந்த குடும்பத்துடன் போவது என்பது முதலாவது பிரச்சனை. மேலும் அவருக்காக தேர்தல் காலங்களில் பறந்து வரும் பறவைகள் கூட அவரை கௌரவமாக காப்பாற்ற முடியாது. விடாது கறுப்பு என்பது போல சூளை மேடு வழக்கு அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கலாம். அதனால் இருவரின் இருப்பும் இங்குதான். தம் இருப்புக்காக தேர்தல் காவடி தூக்கித்தான் ஆகவேண்டும். கருணா அதற்கான வழிகளை தேடிக்கொண்டிருக்க டக்ளஸ் தன் கட்சி இழப்புக்கான பழியை கட்சி உறுப்பினர்கள் மீது போட தொடங்கிவிட்டார். தொலைக்காட்சி பேட்டியில் மட்டுமல்ல அண்மையில் அவர் நடத்திய கிளிநொச்சி சந்திப்பிலும் உங்கள் உழைப்பு போதாது என பழி போட்டதால் மனம் நொந்துபோன பலர் முணு முணுத்தது ஜே வி பி இணையத்துக்கு தீனியாக “விலகுகிறார் சந்திரகுமார்” என செய்தி போட்டுள்ளது.

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3

டக்ளஸ் கருணா இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்ப்பட முடியவில்லை. காரணம் டக்ளசின் குணாம்சம். யாருடன் இணைந்தாலும் நான் தான் தலைவன் என்ற போக்கு. கூட்டமைப்பில் தான் இருந்திருந்தால் நான் தான் தலைமை ஏற்றிருப்பேன் என அடிக்கடி பீத்திக்கொள்வார். தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து சுப்ரபாதம் கேட்டு சுகம் காண்பவர். பிரேமதாச முதல் மகிந்தவரையும் இன்று மைத்திரியுடனும் அவர்களின் மகுடிக்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர். கருணா போராளி மட்டுமல்ல பல களங்களை கண்டவர், முன்னின்று நடத்தியவர். எனது ஜயசிக்குறு வெற்றிக்கு இவர்தான் காரணம் என பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனால் பாராட்டப்பட்டவர். இன்று தான் இருக்கும் கட்சியையே சிங்கள பேரினவாத கட்சி என பேட்டி கொடுக்கும் தைரியம் கொண்டவர். கிழக்கின் அபிவிருத்தியில் இயக்கத்தில் இருந்த போதும் பின் அரசில் இணைந்த போதும் அக்கறைப்பட்டவர். இயக்ககாலத்தில் ஆயித்தியமலையில் அவர் அமைத்த அரிசி ஆலை வன்னிப் புலியை வியக்கவைத்தது.

திங்கள், 14 செப்டம்பர், 2015

அச்ச அசலாக இந்திய பிரபலங்களை போலவே இருக்கும் சாமானிய மக்கள்!!!

உலகத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் ஏழு நபர்கள் இருப்பார்கள் என்று பல காலமாக கூறுவது உண்டு. அதே போல நாமும் பலமுறை இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும் நிறைய பேரை பார்த்திருப்போம். ஆனால், பிரபலமான மக்களின் உருவத் தோற்றம் கொண்டுள்ளவர்களை இது போல பார்க்கும் போது தான் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

முஸ்லீம் மாநாட்டில் மேலாடையின்றி புகுந்து போராட்டம் நடத்திய 2 பெண்கள் (கண்டுகளிக்க காணொளி இணைப்பு)

பிரான்ஸில் நடந்த முஸ்லீம்கள் மாநாட்டின் இடையே புகுந்த மேலாடை இல்லாத இரண்டு பெண்கள் மேடையில் ஏறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு பெண்களையும் மாநாட்டு நிர்வாகிகளும், போலீஸாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவினர்தான் இதை நடத்தி பரபரப்பைக் கிளப்பி விட்டனர்.

நேரலை விவாத நிகழ்ச்சியில் சாமியாரை அறைந்த பெண் ஜோதிடர்: கண்டுகளிக்க காணொளி இணைப்பு

சர்ச்சை சாமியார் ராதே மா குறித்த பேச்சால், டிவி நேரடி நிகழ்ச்சியில் பெண் ஒருவரும், ஆண் சாமியாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் சாமியாரான ராதே மா மீது வரதட்சணை வழக்கு உட்பட எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார் அவர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

41 வயசில் மகனுக்கு தங்கை போல தோற்றமளிக்கும் தைவானின் ”அழகான அம்மா”! (படங்கள் இணைப்பு)

தைவானில் 41 வயதான பெண்மணி ஒருவர் மிகவும் அழகான தோற்றத்துடன் சமூக வலைத் தளங்களை வைரலாகக் கலக்கி வருகின்றார். தற்போது 41 வயது தைவான் பெண்மணியான இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரை சாதாரண அழகு என்று சொல்ல முடியாது.

பின்லேடனின் ‘அந்த’ கிரேன் முறிந்து விழுந்த சம்பவம் கடவுளின் செயல்! – மெக்கா இன்ஜினியர் பேட்டி!

மெக்காவில் கிரேன் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடவுளின் செயலால் நடைபெற்றது என்றும்தொழில் நுட்ப கோளாறு ஏதும் இல்லை என்று கட்டுமான விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விழுந்து விபத்து ஏற்பஊஈஆ கிரேன் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் குடும்ப நிறுவனத்திற்கு சொந்தமானதாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது

போர்க்களத்தில் ஒரு பூ’ தடை…? எஸ்வி சேகர் நடத்திய புது நாடகமா..! * ஆல்பம்

விடுதலைபுலிகளால் நடத்தப்பட்ட ரேடியோவில் ஊடகபிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் கொஞ்ச காலங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழர்களின் ரத்தவாடையை நுகர்ந்தபடி இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவின் இலங்கை ராணுவத்தின் அந்த கொடூர முகத்தின் இன்னொரு வலுவான ஆதாரம் இந்த இசைபிரியாவின் கோரமான படுகொலை நிகழ்வு.இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

“இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…?” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..!

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்தபோதே நமக்கு சந்தேகமும் கூடவே எழுந்தது.. இந்தப் படத்துக்கு எப்படி சென்சார் கிடைக்குமென்று..? அதேதான் இன்றைக்கு நடந்திருக்கிறது.

தமிழரான கணேசன் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இப்போதும் அங்கேதான் குடியிருக்கிறார். இதுவரையில் 5 கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 6 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் இயக்கிய 2 கன்னட திரைப்படங்கள் கர்நாடக அரசின் விருதுப் பட்டியிலில் இடம் பெற்றும் கடைசி நேரத்தில் இவர் தமிழர் என்பதால் நீக்கப்பட்டது.

இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதை-சென்சார் மறுப்பு – என்ன நடந்தது..?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்துப் பெண்ணான இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டும், மத்திய தணிக்கைத் தீர்ப்பாணையமும் மறுத்துவிட்டன.

சனி, 12 செப்டம்பர், 2015

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? (பகுதி 2)

டக்ளஸ் கருணா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தலைமையுடன் முரண்பட்டவர்கள். யாரை எதிர்த்து போராட வந்தார்களோ அவர்களிடமே பாதுகாப்பு தேடியவர்கள். போராட்டத்தில் இவர்களின் தலைமையை ஏற்று வந்தவர்களை களத்தில் பலிகொடுத்து பலி எடுத்தவர்களுடனே கைகுலுக்கி தம்மை பாதுகாத்து கொண்டவர்கள். தங்கள் இயலாமையால் எதிரியிடம் மண்டியிட்டு பதவி அரசியலுக்கு வந்தவர்கள். யாரை எதிரி என அடையாளம் காட்டி தம் தோழர்களை உறுப்பினர்களை களப்பலி ஆக்கினார்களோ அவர்களுக்கு ஊட்டி வளர்த்த ஈழக்கனவை தம்மை பாதுகாப்பதற்க்காக பலி கொடுத்தவர்கள். தாம் யதார்த்தத்தை உணர்ந்தது போல் தம் தோழர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உணர்த்த தவறியவர்கள். இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டவர்கள். தாம் வளர்ந்த பாசறையை மறந்து புதுப் பரணி பாடியவர்கள்.

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன?

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ராணுவ பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் அவரின் தனி நபர் முடிவு, செயல்பாடு, தனிநபர் வழிபாட்டு விருப்பு, அணுகுமுறை காரணமாக இயக்கத்துடன் முரண்பட்ட நிலையில் நடந்த சென்னை சூளைமேடு கொலை சம்பவம் அதனால் ஏற்பட்ட எம் ஜி ஆர் அரசின் அழுத்தம் அவரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது. கருணாவின் வெளியேற்றத்துக்கு பல காரணங்கள் இன்றுவரை இரு தரப்பாலும் அறிக்கைகள் பேட்டிகள் மறுப்புகள் என வந்து சிதம்பர சக்கரமாகவே எம்மை குழப்புகிறது.

தமிழ்வின் இணையத்தள பொய்ச் செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறேன்

பரந்தன் சிவபுரம் குடியிருப்புப் பற்றிய செய்தி உண்மைக்குப் புறம்பானது.

முன்னாள் பா.உ சந்திரகுமார் கண்டனம்.

பரந்தன் சிவபுரம் மக்கள் குடியிருப்பு கடந்த காலத்தில் பல்வேறு அபிவிருத்தித்தி10ட்டங்களிலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம், இது மாவீரர் குடும்பங்களைக் கொண்ட குடியிருப்பு என்றும் இதனால்தான் இங்கே பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் இந்தப் பாதிப்புகளுக்கு நானும் காரணம் எனவும் தமிழ்வின் என்ற இணையத்தளம் வழமையான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதை நான்; வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்டுக்கு பிறந்த மனித உருவ குழந்தை.(வீடியோ)


Share |

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், எப்போதும் வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஷார்ட்கட் கீகளே பொதுவாக இயங்குகின்றன. இருப்பினும் சில செயல்பாடுகள் புதியனவாகவும், கூடுதல் வசதிகள் தருவதாகவும் அமைந்திருப்பதால், சில ஷார்ட்கட் கீகளுக்கான செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மொத்தமாக இங்கு தனி கீகளின் செயல்பாடுகளைக் காணலாம்.

ஸ்மார்ட் போனில் அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்றால் என்ன?

அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்பது, ஸ்மார்ட் போனில் இயங்கும் ஒரு தொழில் நுட்பம். ஒரு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகையில், அதனைப் பல கோணங்களில் திருப்புவோம். எந்த பக்கம் போன் திருப்பப்படுகிறது என்பதனை இந்த தொழில் நுட்பம் உணர்ந்து, அதற்கேற்றார்போல், போனில் உள்ள திரைக் காட்சியை நமக்குக் காட்டுகிறது.

வேர்ட் புரோகிராமில் மினி டூல் பார்

வேர்ட் 2007 / 2010 இரண்டுக்குமான குறிப்பு
இந்த மினி டூல் பார், நமக்கு வேர்ட் 2007ல் தான் தரப்பட்டது. மிகவும் பயனுள்ள டூல் பார். வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த மினி டூல் பார் தானாகத் தோன்றும். நாம் அந்த சொல்லின் பார்மட்டை மாற்ற (அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட, எழுத்தின் அளவு மற்றும் நிறம் மாற்ற) இதனைப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள மெனு செல்ல வேண்டியதில்லை. இதன் இயக்கத்தினை மீண்டும் கொண்டு வர தேவைப்படும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

எக்ஸெல் டிப்ஸ்... எக்ஸெல் பைல்களை ஒழுங்கு படுத்த, பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி

எக்ஸெல் பைல்களை ஒழுங்கு படுத்த: எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:

கூகுள் (google) தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

ஜிமெயிலில் ஆவணக் காப்பகம்

மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.

வேர்ட் டிப்ஸ்! நீளவரியை மடக்கி அமைக்க, வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்

நீளவரியை மடக்கி அமைக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

வியாழன், 10 செப்டம்பர், 2015

ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்?

சிரியா நாட்டு தூதர் டாக்டர் ரியாத் கமெல் அப்பாஸ். | ஐ.எஸ். அமைப்பு வலுப்பெற்றதற்குக் காரணம் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா என்கிறார் இவர்.

சிரியாவின் 4 ஆண்டுகள் சிவில் யுத்தம் அந்நாட்டை சீரழித்துள்ளது. மனிதார்த்த துயரமாக அந்த நாடு முடிந்து போயுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக குழந்தைகள், பெண்களுடன் அலைந்து திரிகின்றனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

உயிருடன் இருக்கனுமா?.. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் போடும் 11 நிபந்தனைகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக் மற்றும் சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.

வியாழன், 3 செப்டம்பர், 2015

"இத" வச்சிக்கிட்டு ஒரு வேலையும் பார்க்க முடியலையே...

52 வயதுக்கார (Roberto Esquivel Cabrera) க்கு வந்த நூதன சிக்கல்...!

மெக்சிகோவைச் சேர்ந்த 52 வயதான ராபர்டோ எஸ்குவல் கார்பெராவுக்கு ஒரு நூதனச் சிக்கல். இந்த சிக்கலால் தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லை என்றும், குறிப்பாக பெண்கள் தன் பக்கம் வருவதையே விரும்புவதில்லை என்றும் கூறிப் புலம்புகிறார் கார்பெரா.

திருமணத்தில் தோழியுடன் சேர்ந்து மணப்பெண் போடும் ஆட்டம்...


Share |

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஈராக்கை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து அதன் வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ். (காணொளி இணைப்பு)

ஈராக்கில் நான்கு பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அவர்களை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் விடியோ படம் பிடித்து அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.

பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை... சொல்வது சரத் பொன்சேகா

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இலங்கையின் முன்னாள் அமைச்சரான கருணா அளித்த பேட்டியில், பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறியிருந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல