வியாழன், 4 நவம்பர், 2010

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா றபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருணைமனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

போர்க்குற்றம் காரணமாக கனடாவில் இலங்கையர் கைது

போர்க் குற்றங்கள் காரணமாக இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என நியூ கேரளா இணையத்தளம் தெரிவித்துள்ளது.  இவர் எம்.வி.சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 491 இலங்கையர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதன், 3 நவம்பர், 2010

சவூதி உலமாக்கள் மூலம் ரிஸானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூதூரைச் சேர்ந்த ஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் அந்நாட்டு உலமாக்கள் மூலமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சம்பந்தப் பட்ட சவூதிஅரேபிய பெற்றோரிடம் மன்னிப்பு வழங்குமாறு இலங்கை மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரிஸான தொடர்பான கருணை மனு சவூதி அரசாங்கத்தினால் பரிசிலீனை

ரிஸானவுக்கு கருணைகாட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் முன் வைத்த கோரிக்கைக்கு சவூதி அரேபியா எந்தவொரு பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கருணை மனு தொடர்பாக சவூதி மன்னர் மாளிகையும் அரசாங்கமும் தொடர்ந்து பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபருக்கு கையடக்கத் தொலைபேசி கொண்டுசென்ற பெண் கைது!

பொரல்லை மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபருக்கு கையடக்கத் தொலைபேசி, மூன்று சிம் அட்டைகள், ஒரு பெட்ரி சார்ஜர் என்பவற்றை உணவுப் பொதியில் மறைத்துவைத்து கொண்டுசென்ற பெண் ஒருவர் நேற்று (02) கைதுசெய்யப்பட்டதாக பொரல்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உணவைக் கொண்டுசென்ற ஐஸ்கீரிம் பெட்டியில் இவை மறைத்துவைத்து கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

ஐந்து விரல்களைக்கொண்ட பாத வடிவில் கரட்

5 விரல்களைக் கொண்ட பாதமொன்றின் தோற்றத்தைக் கொண்ட விநோத கரட்டொன்று பிரித்தானியாவிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் விளைந்துள்ளது. டுர்ஹாம் நகரில் டார்லிங்டன் எனும் இடத்திலுள்ள ஸ்டு வார்ட் போல்டன் என்பவரின் தோட்டத்திலேயே இந்த கரட் விளைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குப்பைக் கூடையிலிருந்து மீட்கப்பட்ட டயானாவின் பாடக்குறிப்புகள்

டயானாவின் பாடக்குறிப்புகள் பிரித்தானிய இளவரசி டயானா 15 வயது சிறுமியாக இருந்தபோது, அவரால் எழுதப்பட்டு வீசப்பட்ட பாடக்குறிப்பொன்றின் பெறுமதி 1500 ஸ்ரேலிங் பவுண் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒபாமாவுடன் இந்தியாவரும் 'கெடிலாக் வன்' பிரத்தியேக கார் (பட இணைப்பு)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கவுள்ளார்.

ஒபாமாவின் விஜயத்தையொட்டி அவருக்கான பிரத்தியேக காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அதிநவீன 'கெடிலாக் வன்' எனப்படும் இக்காரானது சுமார் 7000 கிலோகிராம் நிறை கொண்டது.

செவ்வாய், 2 நவம்பர், 2010

யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்

குடாநாட்டில் இப்போதெல்லாம் இள வயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய் திகளையும். குப்பைதொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங் களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது. அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம். கல்வியறிவில் உயர்ச்சி யடைந்து, மனித விழுமியங்களில் மகோன் னத இடத்தை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிற நாம் இன்னமும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் குடும்ப வாழ்க்கைக்கு தயாராக முன்னரே அவர் களைத் தாயார்களாக்கி விடுவதில் அவ சரம் காட்டுகின்றோம். இத்தகைய இள வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் பெற் றோருக்குத் தெரியாமல் பருவ ஈர்ப்பின் காரணமாக இரகசியமாகவும், சிலவேளை களில் பெற்றோரின் சம்மத்ததோடும் நிகழ்ந்து விடுகின்றன. ஆனாலும் அதனால் பல பின் விளைவுகள் சமூகரீதியாகவும், உட லியல் ரீதியாகவும்(மருத்துவ ரீதியாகவும்) ஏற்படுவதை மறந்துவிடுகின்றோம். ஆண் களை விடவும் பெண்களே உரிய வயதை அடையமுன்னர் நிகழ்கின்ற இளவயது திரு மணங்களால் மகிழ்வான வாழ்வினைத் தொலைக்க வேண்டியவர்களாகின்றனர்.

பஹ்ரைனின் முதல் பெண் கவுன்சிலர் பாத்திமா

பஹ்ரைன் நாட்டில் முஹாரக் முனிசிபல் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் பாத்திமா சல்மான் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் பஹ்ரைன் நாட்டின் முனிசிபல் முதல் பெண் கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாத்திமா. மேலும் வளைகுடா நாடுகளின் முனிசிபல் முதல் பெண் கவுன்சிலரும் பாத்திமா சல்மானே.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல