ஞாயிறு, 7 நவம்பர், 2010
'பாகிஸ்தானின் வளர்ச்சி நன்மையே'
மாணவர்கள் மத்தியில் ஒபாமா
பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால், அதனால் அதிக பலனடையப் போவது இந்தியாதான் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை நன்பகல் மும்பை வந்தடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை மும்பை சென்ட் சேவியர் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, மாணவ, மாணவியர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
Labels:
உலகப்பார்வை
பர்மாவில் தேர்தல்
பர்மாவில் இரு தசாப்தங்களுக்குப் பிறது முதல் தடவையாக பொதுத் தேர்தல் நடந்தது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பெரிய இரு கட்சிகள் தான் இதில் பெரும்பாலான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.
Labels:
உலகப்பார்வை
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி!
மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிங்கிக்கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். இந்த விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்திருக்கிறார் கருணாஸ்.
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...
பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.
Labels:
கணணி மையம் (Internet)
சனி, 6 நவம்பர், 2010
இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் சிங்களவர்கள்!'
1977 இனக்கலவரத்தில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது எனது குடும்பம். எமது லக்கி லேண்ட் பிஸ்கட் கம்பனி சில இன வெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட போது, எம்மையும் படுகொலை செய்ய அவர்கள் முற்பட்டார்கள். அப்போது எம்மை காப்பாற்றியவர்கள் சிங்களவர்ளே!
Labels:
இலங்கை
4 வருடங்களாக எதுவும் சாப்பிடாத சிறுவன் (படங்கள் இணைப்பு)
இங்கிலாந்தில் எந்த உணவும் சாப்பிடாமல் நான்கு ஆண்டுகளாக சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருகிறான். கடந்த நான்கு ஆண்டுகளாக திரவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருகிறான் டேனியல் ஹாரிசன் என்னும் சிறுவன்.
Labels:
வினோதமான செய்திகள்
ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் (படங்கள் இணைப்பு)
ஆசியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் வயதான மனிதரைப்போல் போல் சிலிக்கோன் மாஸ்க் அணிந்து ஹொங்கொங்கில் இருந்து கனடா வந்து சேர்ந்துள்ளார். இவர் விமானத்தில் ஏறிய போது இவரைக் கண்ணுற்ற ஒரு விமான அதிகாரி இவரது கைகள் இளம் வயதினருடைய கைகளைப்போன்று இருந்ததால் இவர் மீது சிறிது சந்தேகம் உண்டாகவே இவரை நோட்டம் விடத்தொடங்கினார்.
Labels:
வினோதமான செய்திகள்
ஜேர்மனியில் விபத்து இலங்கை தமிழர் உட்பட மூவர் பலி
ஜேர்மனியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வேலை முடிந்து வீடு திரும்புகையில் யார் முதலில் போவது என்ற போட்டிக்காக இரு கார்களில் ஒரு காரை மற்ற கார் விரட்டிக்கொண்டு சென்றபோது, எதிர்ப்பக்கத்தில் வந்த இரண்டு கொள்கலன் வாகனங்களுடன் ஒன்றோடு ஒன்று மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.. இறந்த இலங்கையர் யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்ட அரியநேசன்(வயது 53) என்பவர் ஆவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
தமிழர்கள்
அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பில் வென்ற பணத்தை சமூகத்துக்கு நன்கொடையாக வழங்கிய கனேடிய தம்பதியினர்
அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 11.2 மில்லியன் அமெரிக்க டொலரை வென்ற கனடாவைச் சேர்ந்த தம்பதியொன்று, அதில் 10.2 மில்லியன் அமெரிக்க டொலரை தமது சமூகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த பெருந்தொகைப் பணமானது தமக்கு பெரும் தலைவலி தருவதாக இருந்ததால், அதில் 98 சதவீதத்தை சமூகத்துக்கு அளிக்க தீர்மானித்ததாக மேற்படி தம்பதியான அலென் லார்ஜும் (75 வயது), வயலட் லார்ஜும் (78வ யது) தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த பெருந்தொகைப் பணமானது தமக்கு பெரும் தலைவலி தருவதாக இருந்ததால், அதில் 98 சதவீதத்தை சமூகத்துக்கு அளிக்க தீர்மானித்ததாக மேற்படி தம்பதியான அலென் லார்ஜும் (75 வயது), வயலட் லார்ஜும் (78வ யது) தெரிவித்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










