சனி, 12 ஜூன், 2010

புகைத்தலுக்கும் மதுவுக்கும் அடிமையான 3 வயது சிறுமி

சீனாவைச் சேர்ந்த 3 வயது சிறுமியொருவர் வாகன விபத்தொன்றையடுத்து மர்மமான முறையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள இரகசியம் அம்பலமாகியுள்ளது.

யா வென் (Ya Wen)என்ற மேற்படி சிறுமியின் பெற்றோர் குப்பைகளை சேகரித்து விற்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தனது பெற்றோருடன் குடிசையில் வசித்து வந்த யா வென், கடந்த வருடம் வேகமாக வந்த வான் ஒன்றில் மோதி காயமடைந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சையின் பின் உயிர் பிழைத்தார்.

மயக்க நிலையை அடைந்த சிறுமி, கண் விழிக்க ஒருவார காலம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல மாத சிகிச்சையின் பின் பூரண குணமடைந்த யா வென், தனது தந்தையின் சிகரெட்டுகளை களவாடி புதைக்க ஆரம்பித்துள்ளார்.

தந்தையோ தனது சிகரெட் பக்கெட்டிலிருந்து சிகரெட்டுகள் தினசரி காணாமல் போகும் மர்மம் புரியாமல் திகைப்படைந்தார்.

இந்நிலையில் சிறுமியின் தாயார் கயோ (Gao), தமது சின்னஞ்சிறு மகளே சிகரெட்டுகளை களவாடி புகைத்து வரும் இரகசியத்தை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த சிறுமி சிகரெட் பிடிப்பதுடன் மதுபானம் அருந்துவதிலும் விருப்பங்கொண்டுள்ளார்.

மேலும் பெண் பிள்ளைகளுக்கான ஆடைகளை அணிவதை வெறுக்கும் யா வென், ஆண் குழந்தைகள் அணியும் ஆடைகளையே விரும்பி அணிவதாக தெரிவிக்கப்படுகிறது.

தினசரி ஒரு பக்கெட் சிகரட்டுகளை பிடிக்கும் யா வென், 3 கிளாஸ் பியர் அருந்தக் கேட்டு அடம் பிடிப்பதாக அவரது தாயார் கூறினார்.

இதற்கு முன் இந்தோனேசியாவைச் சேர்ந்த புகை பிடித்தலுக்கு அடிமையான அர்டி றிஸால் என்ற இரு வயது சிறுவன் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

தினசரி 40 சிகரெட் வீதம் புகைத்த மேற்படி சிறுவன் சிகிச்சைக்குப் பின் உபயோகிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையை தினசரி 15 ஆக குறைத்துள்ளதாக அவரது தந்தையான மொஹமட் தெவித்தார்.

அர்டி றிஸால், ஒன்றரை வயது முதல் சிகரெட் பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல