சனி, 12 ஜூன், 2010

காட்டுக்குடிசையில் மகளை அடைத்துவைத்து 7 பிள்ளைகளுக்கு தாயாக்கிய பிரேசில் தந்தை

தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 7 பிள்ளைகளுக்கு தாயாக்கிய தந்தையொருவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரேசிலில் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

ஜோஸ் அகொஸ்ரினோ பெரேய்ரா (Agostinho Pereira 54 வயது) என்ற மேற்படி நபர், தனது மகள் மூலம் தனக்கு பிறந்த பெண் பிள்ளைகளில் ஒருவரையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தென் கிழக்கு பிரேசிலில் மாரன்ஹாவோ (Maranhao) மாநிலத்திலுள்ள எக்ஸ் பெமென்டோ கிராமத்திற்கு அருகேயுள்ள காடொன்றில் அமைக்கப்பட்டிருந்த இரு அறைகளைக் கொண்ட குடிசையொன்றில் தனது மகளையும் (28 வயது) அவர் மூலம் தனக்குப் பிறந்த பிள்ளைகளையும் ஜோஸ் அகொஸ்ரினோ அடைத்து வைத்திருந்துள்ளார்.

நிலப் பகுதியிலிருந்து ஆற்றால் துண்டிக்கப்பட்டிருந்த மேற்படி காட்டுப் பிரதேசத்தை படகின் மூலம் மட்டுமே சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு ஜோஸ் அகொஸ்ரினோவின் மனைவி அவ ரை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவர் தனது மகளை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய ஆரம்பித் துள்ளார்.

காட்டுக் குடிசையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாமல் சிறை வைக்கப்பட்டிருந்ததால் ஜோஸ் அகொஸ்ரினோவின் மகளுக்கோ மகள் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கோ இயல்பாக உரையாட முடியாதிருந்ததுடன் எழுத்தறிவும் இல்லாதிருந்தது.

குடிசையிலிருந்து எவராவது தப்பிக்கவோ அன்றி தமக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து யாருக்காவது தெவிக்கவோ முயன்றால் கொன்று விடுவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலை பேசித்தகவலையடுத்து ஜோஸ் அகொஸ்ரினோ கைது செய்யப் பட்டார்.

அநாமதேய தொலைபேசி தகவலையடுத்து 10 நாட்களுக்கு முன்பு ஜோஸ் அகொஸ்ரினோவின் குடிசையை கண்காணிக்க ஆரம்பித்த பொலிஸார், தமக்குக் கிடைத்த தகவல் உண்மையென்பதை உறுதிபடுத்திய பின்னர் திடீரென அந்த குடிசைக்குள் பிரவேசித்த பொலிஸார் அகொஸ்ரினொவை கைது செய்தனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல