சனி, 12 ஜூன், 2010

5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலணி

5,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் பழைமையான காலணியொன்று ஆர்மேனிய குகையொன்றிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அயர்லாந்து கோர்க் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த அரிய காலணி தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆர்மேனியாவின் வோயொட்ஸ் டஸோர் (Vayots Dzor) மாகாணத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலணி பனிப்பாறையில் நன்கு பேணப்பட்ட நிலையில் காணப்பட்டதாக இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற தொல்பொருள் ஆய்வாளரான கலாநிதி ரொன் பின்ஹாஸி (Ron Pinhasi)தெரிவித்தார்.

கிறிஸ்துவுக்கு முன் 3500 ஆம் ஆண்டு காலப்பகுதியை சேர்ந்த இந்த காலணி அமெரிக்க அளவுத் திட்டத்தின்படி 7 ஆம் இலக்க பெண்கள் காலணியின் அளவுடையதாகும். எனினும் இது அக்கால கட்டத்தில் வாழ்ந்த ஆண் ஒருவரால் அணியப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆர்மேனிய மாணவியான டயானா ஸர்டாயினால் இந்த பாதணி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காலணியானது தோல் பகுதியை உள்ளடக்கியுள்ளது. Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல