600 இறாத்தல் நிறையுடைய டொன்னா (Donna Simpson 42 வயது), தனது நிறையை 1000 இறாத்தலாக அதிகரிப்பதே தனது இலட்சியம் எனத்தெரிவிக்கிறார்.
அளவுக்கதிகமான நிறையானது ஒரு பெண்ணுக்கு பாலியல் கவர்ச்சியை தரும் என வாதிடும் டொன்னா, தனது பருமனான அழகை கண்டு மயங்கிய பிலிப்பே கோம்பா (Philippe Gouamba 49வயது) என்பவருடன் சட்பூர்வமற்ற முறையில் இணைந்து வாழ்கிறார். இந்த ஜோடி இந்த வருடம் ஹவாயில் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்த ஹவாய் பயணத்தின் பொருட்டு தனது உடல் பருமனுக்கு ஏற்ப வசதிகளை செய்து தர விமான சேவையை கோர வேண்டியுள்ளதாக அவர் தெவித்தார் பிலிப்பே கோம்பாவுடனான காதல் தொடர்பின் மூலம் 3 வயது பெண் குழந்தையொன்று டொன்னாவுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொன்னாவின் அழகு தொடர்பில் பிலிப்பே கோம்பா விபரிக்கையில், டொன்னாவின் பருத்த வயிற்றிலுள்ள மடிப்புகள் அவருக்கு மிகுந்த பாலியல் கவர்ச்சியை அளிப்பதாக கூறினார். டொன்னாவுக்கு முன்னைய திருமணத்தின் மூலம் 14 வயது மகன் ஒருவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. டொன்னா தனது உணவுக்காக வாரமொன்றுக்கு 750 அமெக்க டொலரை செலவிடுகிறார். நீழிவு நோயால் பாதிக் கப்பட்ட அவர் சமைப்பதற்கும் குளிப்பதற்கும் தான் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறினார். எனினும் அவரது அளவுக்கு அதிகமான நிறையால் அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என பலரும் செய்த எச்சரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். நான் ஆரோக்கியமாக உள்ளேன். 3 மாதத்திற்கு ஒரு தடவை மருத்துவரை அணுகி உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்து வருகிறேன் என்று அவர் தெவித்தார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக