சனி, 14 ஆகஸ்ட், 2010

பிச்சைகாரனுக்கு ப்ளாடினம் கடனட்டையை அளித்த பெண்மணி

மெர்ரி ஹாரிஸ் (Marrie Harris) என்ற பெண்மணி மன் ஹாட்டன் அருகே ரெஸ்டராண்ட் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய வாலன்டைன் (Jay Valentine) என்ற பிச்சைகாரர் பிச்சை கேட்டார்.மெர்ரியிடம் சில்லறை இல்லை.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டை (American Express Platinum Card)மட்டுமே இருந்தது.

"கடனட்டையை தருகிறேன்.வேண்டுவதை வாங்கிகொண்டு திருப்பி கொண்டுவந்து விடு" என்றார்.

"சரி" என சொல்லி கடனட்டையை வாங்கிகொண்டு போனார் வாலன்டைன்

நடந்ததை கவனித்த பிற கஸ்டமர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்."அவன் திரும்பி வரமாட்டான்" என்றார்கள்.

அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் வண்ணம் வாலன்டைன் சில மளிகை பொருட்களை வாங்கி கொண்டு அதே இடத்துக்கு திரும்பி வந்து கடனட்டையை அளித்தார்

சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் வினவியபோது "மனிதர்கள் மேல் என் நம்பிக்கை அகலவில்லை. பிச்சைகாரரை நம்பி நான் ஏன் கடனட்டையை தரகூடாது?" என கேட்டார் மெர்ரி.

"அவரை ஏமாற்றும் எண்ணம் ஒரு நொடியிலும் என் மனதில் உதிக்கவில்லை.ரெஸ்டராண்டில் இருந்த அனைவரும் நான் ஓடிவிடுவேன் என நினைத்தார்கள்.ஆனால் நான் ஏன ஓடவேண்டும்?" என கேட்டார் வாலன்டைன்.

வறுமை,வளமை அனைத்தையும் தாண்டி மனிதம் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல