பீடி விளம்பரத்திலிருந்து ஜாடி விளம்பரம் வரைக்கும் தலையை காட்டி பேலன்சை பலப்படுத்திக் கொள்ளும் ஹீரோக்கள் யாரும் லாஜிக் பார்ப்பதாக இல்லை.
வியாபார ஸ்தலமான தி.நகரில் அமைந்துள்ள முக்கியமான கடை ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஆனார் பிரகாச நடிகர்.
இந்த கடையின் மீது ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள். இந்த நேரத்தில் இவர் எடுத்த முடிவு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்படுவதாக இல்லை.
இந்நிலையில் பிரபல நகைக்கடையான ஜாஸ் ஆலுக்காஸ் என்ற நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆகியிருக்கிறார் விஜய்.
மும்பை, கேரளா என்று பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைபரப்பியிருக்கும் இந்த நிறுவனம், தமிழ்நாட்டுக்கு மட்டும் விஜய்யை அம்பாசிடராக ஆக்கியிருப்பதாக தகவல்.
ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் மாதவனும், வேஷ்டி விளம்பரத்தில் விக்ரமும், ஹேர் டை விளம்பரத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருப்பதைதான் நீங்கள் அறிவீர்களே!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக